உங்களை பணவரவு தேடி வர இந்த விளக்கை ஏற்றுங்கள்!
அனைவரின் இல்லங்களிலும் காமாட்சி விளக்கு அல்லது அஷ்டலஷ்மி விளக்கு என்று ஒரு விளக்கு கண்டிப்பான முறையில் இருக்கும்.
பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்குரிய முயற்சிகளை எடுக்க வேண்டும். முயற்சியோடு சேர்ந்து சில பரிகார முறைகளை நாம் மேற்கொள்ளும் பொழுது பணவரவு என்பது அதிகரிக்கும்.
இந்து மதத்தைச் சார்ந்த அனைவரும் தங்கள் இல்லங்களில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ளும் பழக்கத்தில் இருப்பார்கள். அவ்வாறு விளக்கேற்றும் பொழுது என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என்று பல வழிமுறைகள் இருக்கின்றன.
அதிலும் எந்த காரியத்திற்காக எப்படி விளக்கேற்ற வேண்டும் என்ற சூட்சும விதிகளும் இருக்கிறது.
விளக்கு
அனைவரின் இல்லங்களிலும் காமாட்சி விளக்கு அல்லது அஷ்டலஷ்மி விளக்கு என்று ஒரு விளக்கு கண்டிப்பான முறையில் இருக்கும்.
ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அதன் மேல் இரண்டு வெற்றிலை ஒரு கொட்டை பாக்கு வைக்க வேண்டும்.
அந்த வெற்றிலைக்கு மேல் ஒரு ரூபாய் நாணயங்களை மூன்று மூன்றாக ஒன்பது நாணயங்கள் வைக்க வேண்டும்.
விளக்கு ஏற்ற
அந்த நாணயங்களுக்கு மேல் மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரிக்கப்பட்ட காமாட்சி விளக்கை வைக்க வேண்டும். விளக்கை சுற்றி பூக்களை வைக்க வேண்டும்.
பிறகு அந்த காமாட்சி விளக்கில் நல்லெண்ணெய் மற்றும் நெய் இரண்டையும் கலந்து ஊற்ற வேண்டும். பிறகு இரண்டு பஞ்சு திரிகளை ஒன்றாக திரித்து போட வேண்டும்.
இப்பொழுது விளக்கேற்ற காமாட்சி விளக்கு தயாராகி விட்டது. தீபம் ஏற்றி எப்போதும் போல் நம் பூஜை செய்யலாம்.
வெற்றிலை பாக்கு
இந்த வெற்றிலை பாக்கை நாம் மறுபடியும் எப்பொழுது பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்கிறோமோ அப்பொழுது எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.
மறுபடியும் புதிதாக வெற்றிலை பாக்கை வைத்து நாம் ஏற்கனவே உபயோகப்படுத்திய ஒரு ரூபாய் நாணயங்களை திரும்பவும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த முறையில் நாம் விளக்கேற்றும் பொழுது நாம் எதிர்பாக்காத இடத்தில் இருந்து கூட நம்மை பணம் தேடி வரும்.
இந்த சூழ்நிலையில் நாம் ஏதாவது முயற்சி செய்தோம் என்றால் அந்த முயற்சியின் பலன் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.