மீனாட்சி அம்மன் கோயில்

மீனாட்சி அம்மன் கோயில் : இந்தியா முழுவதும் பல கோயில்கள் உள்ளன நிலையில், கோயில்கள் அனைத்தும் பல்வேறு சம்பிரதாயங்கள், ஆகம விதிகள் பின்பற்றப்படுகின்றன.

அப்படி கோயில்கள் ஒவ்வொரு கிரகண நேரங்களில் மூடப்பட்டு சிறப்பு பூஜை செய்து மீண்டும் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோயில் சந்திர கிரகணம் காரணமாக கூடுதலாக 11 மணி நேரங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரணம் ஜூலை 17ஆம் தேதி அதிகாலை 1.32 மணியிலிருந்து 4.30 மணி வரை நடைப்பெற உள்ளது.

இதன் காரணமாக கோயில் மாலை 6.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரகணத்திற்கு பின்னர் சிறப்பு பூஜை செய்து கோயில் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயிலைப் போல, பழனி முருகன் கோயில், ராமேஸ்வரம் கோயில், திருப்பரங்குன்றம் கோயில்களும் மாலை 6 மணி முதல் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.