தேர்தல்

தேர்தல் தொடர்பில் மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு: சட்டரீதியான பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமாயின் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தமுடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்தமுடியுமா என, உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் கேட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு சட்டசிக்கல் ஏற்படாது என அறிவிக்கப்பட்டால், ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்விதமான இடையூறுகளும் இன்றி, மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தமுடியும் என்றும் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்.