அது மட்டும் நடந்து இருந்தா.... தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான்... கேப்டன் கேஎல்.ராகுல் விளக்கம்!

டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சாய் சுதர்ஷன் 62, கேப்டன் கேஎல் ராகுல் 56 ரன்கள் எடுக்க, இந்திய அணி 211 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது.

அது மட்டும் நடந்து இருந்தா.... தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான்... கேப்டன் கேஎல்.ராகுல் விளக்கம்!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சாய் சுதர்ஷன் 62, கேப்டன் கேஎல் ராகுல் 56 ரன்கள் எடுக்க, இந்திய அணி 211 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது.

எளிமையான இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர் டோனி டி டார்சி ஆட்டம் இழக்காமல் 119 ரன்கள் எடுக்க, 42 ஓவர்களில் இலக்கை எட்டி தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோல்விக்கு பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் கேஎல்.ராகுல், “ஒருவேளை நாங்கள் டாஸ் வென்று இருந்தால் எல்லாம் மாறி இருக்கும். முதல் பாதியில் பந்துவீச்சுக்கு நிறைய சாதகம் இருந்தது.

கதிகலங்க வைத்த ரோஹித் ரசிகர்கள்... உறைந்து போனது மும்பை இந்தியன்ஸ்!

நாங்கள் மேற்கொண்டு விளையாடி இருந்தால் 50, 60 ரன்கள் சேர்த்து எடுத்திருக்க முடியும். ஆனால் ஆட்டம் இழந்து விட்டோம். இதுதான் இந்த போட்டியில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடம். மேலும் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் இருந்து ஆரம்பத்தில் நல்ல உதவி கிடைத்தது. 

கிரிக்கெட்டில் சரி, தவறு என்று எதுவும் கிடையாது. வீரர்கள் சொந்தமாக கேம் பிளான் கொண்டு வருவார்கள் என்று நாம் நம்புகிறோம். எங்களுக்கு ஆரம்பத்தில் முதல் 10 ஓவர்களில் பந்துவீச்சில் கொஞ்சம் உதவி இருந்தது. 

எங்கள் பந்துவீச்சாளர்கள் வீசிய நிறைய பந்துகள் மட்டையை விட்டு விலகி சென்றன. நாங்கள் அவர்கள் மீது அழுத்தம் கொடுத்து இருக்கலாம். நாங்கள் அடுத்த ஆட்டத்திற்கு கவனம் செலுத்த விரும்புகிறோம்” என்று கூறி உள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...