பாலியல் துன்புறுத்தல்

இளம் பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Bois-le-Roi (Seine-et-Marne) நகர் நோக்கி பயணிக்கும் ligne R வழி ரயிலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்தசனிக்கிழமை 19 வயதுடைய பெண் ஒருவர் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது 26 வயதுடைய இளைஞன் ஒருவர் அப்பெண்ணுடன் பேச முற்பட்டுள்ளார்.

ஆனால் அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அப்பெண்ணுடன் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளார்.

உடனடியாக காவல்துறையினருக்கு அப்பெண் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் Yonne நகரில் வைத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.