பிக்பாஸ் விதிமுறைகளை மீறிய ரொமான்ஸ் ஜோடி... கமல் கண்டிப்பாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு காதல் ஜோடி என்பதற்கு ஓவியா - ஆரவ், கவின் - லாஸ்லியா, அமீர் - பாவனி ஆகியோர்களை உதாரணமாக கூறலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு காதல் ஜோடி என்பதற்கு ஓவியா - ஆரவ், கவின் - லாஸ்லியா, அமீர் - பாவனி ஆகியோர்களை உதாரணமாக கூறலாம்.
அந்த வகையில் இந்த சீசனின் முதல் நாளே மணிசந்திரா மற்றும் ரவீனா காதல் ஜோடியாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே இவர்கள் காதலிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இருவரும் பிக் பாஸ் வீட்டில் உள்ளதால் ரொமான்ஸுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மணி மற்றும் ரவீனா பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென கையில் எழுதி மணி காண்பிக்க அதை ரவீனா படிக்கும் காட்சி உள்ளது.
இது பிக்பாஸ் விதிகளை மீறும் செயலாகும். எனவே இந்த வாரம் சனிக்கிழமை இதனை கமல் கண்டிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஒரு பக்கம் அமைதியாக இருக்கும் ஜோவிகாவுக்கு கூல் சுரேஷ் அறிவுரை கூறுவது, இன்னொரு பக்கம் கேப்டனுக்கும் பிரதீப் அந்தோணிக்கும் வாக்குவாதம் நடைபெறுவது.
அதுமட்டுமின்றி பிக் பாஸ் அதிரடியாக ஆறு பேர்களை சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்புவது என முதல் இரண்டு நாட்களிலேயே பரபரப்பான காட்சிகள் நிகழ்ந்து கொண்டிருப்பதால் இந்த சீசன் நிச்சயம் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.