போப் பிரான்சிஸ் மறைவு - உலகத் தலைவர்கள் இரங்கல்
போப் பிரான்சிஸ் 88 வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல உலகத் தலைவர்கள் கத்தோலிக்கர்களுக்குச் சமூக வலைத்தளங்களின் ஊடாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

போப் பிரான்சிஸ் 88 வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல உலகத் தலைவர்கள் கத்தோலிக்கர்களுக்குச் சமூக வலைத்தளங்களின் ஊடாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
"போப் பிரான்சிஸ் ஏழை எளியோருக்கு உதவிக்கரம் நீட்டினார். அவதிப்படுவோருக்கு நம்பிக்கை அளித்தார். அவர் இந்திய மக்கள் மீது வைத்திருந்த அன்பு எப்போதும் போற்றப்படும்" என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
"போப் பிரான்சிஸ் எளிதில் பாதிக்கக்கூடியவர்களுக்குக் குரல் கொடுத்தவர். உலகெங்கும் உள்ள கத்தோலிக்கர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தச் செய்தி பலருக்குப் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும்" என, - பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் கூறியுள்ளார்.
"போப் ஆற்றிய சேவை, அவர் காட்டிய கருணை. அவர் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். அவரது நினைவுகள் பலரது மனத்தில் எப்போதும் நிலைத்து நிற்கும்" என நெதர்லந்துப் பிரதமர் டிக் ஸ்கூப் குறிப்பிட்டுள்ளார்.
"போப்பின் மறைவு வருத்தமளிக்கிறது. பணிவு மிகுந்தவர். வெவ்வேறு சமயங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை ஊக்குவித்தார். என நியூசிலந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன் பதிவிட்டுள்ளார்.