செவ்வாய்க் கிரகத்தின் ஆழத்தில் நிலத்தடி நீர்.!

50
mars-still-has-active-deep-groundwater
W3Schools

ஆழ்ந்த நிலத்தடி நீர் இன்னும் செவ்வாய்க் கிரகத்தில் இயக்கத்தில் உள்ளதென்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ரெட் பிளானட் என்று அழைக்கப்படும் செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழத் தேவையான அனைத்து விபரங்களையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து சேகரித்து வருகின்றனர்.

அதேபோல் தற்பொழுது செவ்வாய்க் கிரகத்தில் நிலத்தடி நீர் இயக்கத்தில் இருக்கக் கூடுமென்று விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் சில உண்மைகளைத் தெரிவித்துள்ளனர்.

தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், செவ்வாய்க் கிரகத்தின் துருவங்களைக் காட்டிலும் பறந்து புவியியல் பரப்பில் தான் நிலத்தடி நீர் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நிலக்குழிகள் வாயிலாக வெளிவரும் நிலத்தடி நீர் செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் நிலக்குழிகள் வாயிலாக இந்த நிலத்தடி நீர்கள் வெப்ப வாயுவாக நிலத்தின் அடியிலிருந்து மேற்பரப்பிற்கு வருவதாகவும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ரீகண்ட் ஸ்லொப் லீனா செவ்வாய்க் கிரகத்தில் காணப்படும் “ரீகண்ட் ஸ்லொப் லீனா”வின் குணாதிசயங்கள் அணைத்து செவ்வாயில் நீரோட்டம் இருந்ததற்கான ஆதாரமாய் இருபதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ரீகண்ட் ஸ்லொப் லீனாவில் கண்டறியப்பட்ட குறுகிய நீரோடை தோற்றங்கள் அனைத்தும் நீரோட்டத்திற்கு ஒப்பாகவே உள்ளது என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சஹாரா மற்றும் செவ்வாய்க் சஹாரா மற்றும் செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் நிலத்தடி நீர் வழிமுறைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளை ஒப்பிட்டு விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

முன்பு இந்த தோற்றங்களை மேற்பரப்பு நீர் ஓட்டம் அல்லது நெருங்கிய பரப்பின் கீழிருக்கும் நீர் ஓட்டம் என்று விஞ்ஞானிகள் கருதிவந்துள்ளனர். 750 மீட்டர் ஆழத்தில் நீர் பூமி மற்றும் செவ்வாய் என்ற இரண்டு கிரகங்களுக்கிடையிலான ஒற்றுமைகளின் ஆழமான ஆதாரமாக நிலத்தடி நீர் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க் கிரகத்தில் இயக்கத்தில் இருக்கும் நிலத்தடி நீர்த் தேக்கங்கள் எப்படியும் சுமார் 750 மீட்டர் ஆழத்திற்கு அப்பாற் உள்ளது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆழமான பகுதியில் நிலத்தடி நீர் இரு கிரகங்களுக்கும் ஈரமான காலங்கள் இருந்திருக்கலாம் என்றும், ஆழமான பகுதியில் நிச்சயம் நிலத்தடி நீர் இன்னும் இயக்கத்தில் இருப்பதற்கான சாத்தியக்கூறு மற்றும் அறிகுறிகள் அதிகம் செவ்வாய்க் கிரகத்தில் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகள் செவ்வாய்க் கிரகத்தில் காணப்படும் இந்த நீரோடைகளின் ஆதாரங்கள், முன்னர் கருதப்பட்டதை விட நிலத்தடி நீர் இருப்பதற்கான வாய்ப்பு இன்னும் ஆழமாகவும் அதிகமாகும் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

To stay updated with latest technology news & gadget reviews, follow colombotamil on Twitter, Facebook, YouTube and also subscribe to our notification.

W3Schools