சில பாடசாலைகளுக்கு திங்கள் மற்றும் செவ்வாய் விடுமுறை!
மழையுடனான வானிலை காரணமாக மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மழையுடனான வானிலை காரணமாக மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் விலி கமகே ஆகியோரின் தலைமையில் மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவ குழுக் கூட்டம் இன்று மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மாத்தறை மற்றும் அக்குரஸ்ஸ கல்வி வலயத்திலுள்ள மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்கள் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அத்துடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் கல்வி சார் ஊழியர்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் கடந்த 05 மற்றும் 06ம் திகதிகளிலும் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த விடுமுறைகள் நீடிக்கப்பட்டுள்ளது.