தோனி சொன்ன ஒரு வார்தை... எல்லாமே மாறிடுச்சு – மனந்திறந்த மதிஷா பதிரனா 

தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஏழு ஓவர்களில் 70 ரன்கள் குவித்து முன்னணியில் இருந்தது. 

தோனி சொன்ன ஒரு வார்தை... எல்லாமே மாறிடுச்சு – மனந்திறந்த மதிஷா பதிரனா 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தியதற்கு மிக முக்கிய காரணமாக, சிஎஸ்கே வேகப்பந்துவீச்சாளர் மதிஷா பதிரனா உள்ளார்.

நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் சில விடயங்களை மனந்திறந்து பேசி இருக்கிறார்.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்கள், சிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்கள், தோனி 4 பந்தில் 20 ரன்கள் எடுத்தனர்.

இதனால், 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு சிஎஸ்கே 206 ரன்கள் குவித்தது. கடைசிக் கட்டத்தில் தோனி அதிரடியாக விளையாடியதால் அந்த அணி 200 ரன்களை தாண்டியது.

தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஏழு ஓவர்களில் 70 ரன்கள் குவித்து முன்னணியில் இருந்தது. 

எட்டாவது ஓவரில் பந்து வீச்சுக்கு வந்த பதிரன, இஷான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றி சிஎஸ்கே அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

பின்னர், ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா இருவரும் சேர்ந்து அதிரடியாக 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். மீண்டும் பந்துவீச்சுக்கு திரும்ப வந்த பதிரன திலக் வர்மா விக்கெட்டை கைப்பற்றி மீண்டும் சிஎஸ்கே அணியை ஆட்டத்துக்குள் கொண்டு வந்தார்.

கடைசி கட்டத்தில் அதிரடி பேட்ஸ்மேன் ஆன ரொமாரியோ செப்பர்டை கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். மொத்தம் நான்கு ஓவர் வீசி 28 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி சிஎஸ்கே வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதனால் இவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற பதிரன கூறும்போது, “பவர் பிளேவில் பந்து வீசும் போது நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். அப்போது என்னிடம் தோனி எதையும் யோசிக்காமல் அமைதியாக இயல்பாக இருக்கும் படி கூறினார். நான் என்னை அப்படியே வைத்துக் கொண்டேன். 

இது எனக்கு பந்துவீச்சில் உதவியது. நான் பேட்ஸ்மேன்களுக்கு தகுந்தபடி சில திட்டங்களை மாற்றுவேன். என்னுடைய கவனம் எப்பொழுதும் என்ன ரிசல்ட் என்பதில் கிடையாது. சரியாக செயல்படுத்துவதில் மட்டுமே இருக்கிறது . ஒட்டுமொத்த அணியினரின் ஆதரவு தான் இன்று நான் சிறப்பாக திரும்பி வந்து செயல்பட்டதற்கு காரணம்” என்றார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp