தண்ணீர் பாட்டிலில் மர்ம பொருள்.. மயங்க் அகர்வால் உயிரை எடுக்க சதி?... பரபரப்பு புகார்!
போட்டியில் ஆடி விட்டு சக வீரர்களுடன் அவர் அடுத்த போட்டியில் பங்கேற்க சூரத் செல்ல விமானம் ஏறி இருந்தார்.
இந்திய டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோலியின் நண்பரான மயங்க் அகர்வால். அண்டர் 19 கிரிக்கெட் அணியில் சிறந்த கிரிக்கெட் வீரராக தன்னை நிரூபித்து இருக்கிறார்.
எனினும், அவருக்கு இந்திய அணியில் நிலையான வாய்ப்பு கிடைக்காத நிலையில், அவர் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபியில் கர்நாடகா அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், போட்டியில் ஆடி விட்டு சக வீரர்களுடன் அவர் அடுத்த போட்டியில் பங்கேற்க சூரத் செல்ல விமானம் ஏறி இருந்தார்.
விமானத்தில் தன் இருக்கைக்கு முன் இருந்த பையில் வைக்கப்பட்டு இருந்த குடிநீர் பாட்டிலை எடுத்து அருந்தி இருக்கிறார் மயங்க் அகர்வால்.
அவரது தொண்டை எரிய உடனே அதனை கீழே துப்பியதுடன், பின்னர் வலி ஏற்பட்டு மயக்கம் அடைய அவரை உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் அவர் அபாய கட்டத்தில் இல்லை என்பதை அறிந்து அனைவரும் நிம்மதி அடைந்துடன், அவர் அருந்திய குடிநீர் பாட்டிலில் இருந்தது என்ன? என்ற கேள்வி எழுந்தது.
இதை அடுத்து தன் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் திட்டமிட்டு நடந்திருக்கலாம் என்பதால் மயங்க் அகர்வால் திரிபுரா மாநிலம் அகர்தலா நகர காவல்துறையிடம் புகார் அளித்து இருக்கிறார்.
இதற்கிடையே அவர் அனுமதிக்கப்பட்ட ஐஎல்எஸ் மருத்துவமனை அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.