ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் வீரர்... தரமான சம்பவம்!
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையை பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர் முகமது ரிஸ்வான் சமன் செய்திருக்கிறார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையை பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர் முகமது ரிஸ்வான் சமன் செய்திருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் முக்கிய தூணாக உள்ள ரிஸ்வானும், பாபர் அசாமும் சொதப்பினால் அன்றைய நாளில் பாகிஸ்தான் தோல்வியை தழுவுவது என்பது 100 சதவீதம் உறுதியாகும்.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிராக தோல்வியுடன், சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் எஞ்சிய இரண்டு போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் பாகிஸ்தான் இருந்தது.
இந்த நிலையில் கனடா அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் கனடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது.
107 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் வழக்கம் போல் ரிஸ்வானும் பாபர் அசாமும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்ற ரிஸ்வான் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து 53 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் முஹமது ரிஸ்வான் அரை சதம் அடித்ததன் மூலம் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்து இருக்கிறார்.
அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் அடித்த தொடக்க வீரர் என்ற பெருமையை தற்போது ரிஸ்வான் பெற்று உள்ளார்.
ரிஸ்வான் 71 இன்னிங்ஸில் 30 முறை அரைச்சதம் அடித்திருக்க ரோகித் சர்மா 118 இன்னிங்ஸில் 30 முறை அரைசதம் அடித்துள்ளார். எனினும் ரிஸ்வானை விட ரோகித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் தான் அதிகமாக இருக்கும்.
பாபர் அசாம் 28 முறை அரை சதம் அடித்து இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். டேவிட் வார்னர் 27 முறை அரைசதம் அடித்து நான்காம் இடத்தில் உள்ளார்.
ரிஸ்வான் இதுவரை 100 டி20 போட்டிகளில் விளையாடி 3,243 ரன்கள் அடித்திருக்கிறார். அவருடைய ஸ்ட்ரைட் 127 என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.