உலக சாதனை படைத்த முகமது ஷமி... குறைவான பந்துகளில் 200 விக்கெட்.. தரமான சம்பவம்

இந்திய அணியின் முகமது ஷமி 10 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், இதன் மூலம் குறைவான ஒரு நாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

உலக சாதனை படைத்த முகமது ஷமி... குறைவான பந்துகளில் 200 விக்கெட்.. தரமான சம்பவம்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் பந்துவீச்சாளராக 200 விக்கெட்டுகளை மிக குறைந்த ஒரு நாள் போட்டிகளில் கைப்பற்றி சாதனை படைத்து உள்ள முகமது ஷமி குறைவான பந்துகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி உலக சாதனை படைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் இந்திய அணியும் மோதிய வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்து 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் முகமது ஷமி 10 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், இதன் மூலம் குறைவான ஒரு நாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

முன்னதாக அஜித் அகர்கர் 133 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 200 விக்கெட்டுகளை  இந்திய அளவில் சாதனையாக இருந்த நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் 200 விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு முகமது ஷமிக்கு 104 போட்டிகள் தேவைப்பட்டன. 

வங்கதேச அணி வீரர் ஜேக்கர் அலி, 68 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமி வீசிய பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழக்க அது, ஷமியின் 200வது விக்கெட்டாக மாறியது.

இதேவேளை, ஐந்து முறை 5 விக்கெட்டுகளையும் 10 முறை நான்கு விக்கெட்டுகளையும் ஒரு நாள் போட்டிகளில் கைப்பற்றி ஷமி சாதனை படைத்து உள்ளார். அத்துடன், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றும் 8-ஆவது இந்திய வீரர் ஷமி என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பந்துகள் அடிப்படையில் பார்க்கும்போது 5126 பந்துகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய உலகின் முதல் பவுலர் என்ற சாதனையையும் முகமது ஷமி படைத்து உள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க்கின் 5240 பந்துகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனையை முகமது ஷமி முறியடித்துள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp