இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்தப் பிறகு.. ஓய்வை அறிவிக்கும் இந்திய வீரர்?... வெளியான தகவல்!
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவார் எனக் கருதப்பட்ட நிலையில், அப்படி நடக்கவில்லை.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் இந்தியா தோற்றாலும், அடுத்தடுத்த இரண்டு தொடர் வெற்றிகளை பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி ரன்மழை பொழியும் எனக் கருதப்பட்ட நிலையில், இந்திய அணி அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்து வருகிறது. ஜெய்ஷ்வால் 2, 3ஆவது ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து, அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.
தற்போது, நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 40/0 ரன்ளை எடுத்துள்ளது.
இன்றைய ஆட்டத்தில் 152 ரன்களை அடித்தால், இந்தியா வெற்றியைப் பெற்றுவிடும் என்பதால், இந்தியா தொடரை கைப்பற்ற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவார் எனக் கருதப்பட்ட நிலையில், அப்படி நடக்கவில்லை.
காலில் ஏற்பட்ட காயத்தால் அவர் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில், ஐபிஎல் 17ஆவது சீசனில் இருந்தும் அவர் விலகிவிட்டார்.
முகமது ஷமிக்கு அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது. இதற்காக, அவர் இங்கிலாந்து செல்ல உள்ளார். அறுவை சிகிச்சை முடிந்தப் பிறகு, அவரால், அடுத்த 6 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்த உடனே, மூன்றுவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவிக்க முகமது ஷமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதே அவர் ஓய்வு அறிவிக்க திட்டமிட்டாராம். ஆனால், அப்படி ஓய்வு அறிவித்துவிட்டால், அறுவை சிகிச்சைக்கு பிசிசிஐ செலவு செய்வதில் சிக்கல் இருக்கிறது. ஆகையால்தான், டெஸ்ட் தொடர் முடிந்தப் பிறகு ஓய்வு அறிக்க பிசிசிஐ கேட்டுக்கொள்ளதாகவும் கூறப்படுகிறது.
33 வயதாகும் முகமது ஷமி, இந்திய அணிக்காக 64 டெஸ்ட், 101 ஒருநாள், 23 டி20 போட்டிகளில் விளையாடி, 229, 195, 24 என விக்கெட்களை குவித்திருக்கிறார்.
அத்துடன், ஐபிஎல் தொடரில் 110 போட்டிகளில் விளையாடி 127 விக்கெட்களை சாய்த்துள்ளார்.