முகமது ஷமி மீண்டும் காயம்? ஆஸ்திரேலியா தொடரில் விளையாடுவது சாத்தியமா?
ஓய்வில் இருந்த முகமது ஷமிக்கு கடந்த பெப்ரவரி மாதம் இலண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி காலில் காயம் ஏற்பட்ட நிலையிலும், உலகக்கோப்பை தொடரை முழுமையாக விளையாடியதுடன், ஓய்வில் இருந்த முகமது ஷமிக்கு கடந்த பெப்ரவரி மாதம் இலண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனையடுத்து, ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரை தவறவிட்ட முகமது ஷமி, 3 மாதங்களுக்கு முன்பாக பயிற்சியை ஆரம்பித்தார். இதன் மூலமாக ஷமி பழைய நிலைக்கு திரும்பியதாக பார்க்கப்பட்டது.
ஆனால் வங்கதேச டெஸ்ட் தொடரில் முகமது ஷமி சேர்க்கப்படாத நிலையில், அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று தெரியவந்ததுடன், முகமது ஷமி நேரடியாக பயிற்சியை தொடங்கினார்.
இதனால் முகமது ஷமி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு கட்டாயம் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், என்சிஏவில் பயிற்சி மேற்கொண்ட போது முகமது ஷமியின் காலில் மீண்டும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட பிசிசிஐ, ஷமியின் கம்பேக் சரியான பயணத்தில் சென்று கொண்டிருப்பதாகவும், நியூசிலாந்து டெஸ்ட் தொடரை இலக்காக வைத்துள்ளதுடன், சிறப்பு நிர்வாகியை வைத்து முகமது ஷமியை தீவிரமாக கண்காணித்து வருவதுடன், அவர் விரைவாக குணமடைந்து வருகிறார் என்று கூறியுள்ளது.
அத்துடன், ஷமி தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவில், அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்பபடுவதுடன், தான் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவதுடன், தான் அல்லது பிசிசிஐ, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்றும், ஆதாரமற்ற செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்னும் ஒரு வாரத்தில் தேர்வு செய்யப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.