பிடிவாதம் பிடிக்கும் கம்பீர்.. திடீரென பேட்டிங் பயிற்சியில் களமிறங்கிய முகமது ஷமி.. காரணம் எனன?

அடுத்த மாதம் நடைபெற உள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேக பந்துவீச்சாளர் முகமது ஷமி தயாராகி வருகிறார். 

பிடிவாதம் பிடிக்கும் கம்பீர்.. திடீரென பேட்டிங் பயிற்சியில் களமிறங்கிய முகமது ஷமி.. காரணம் எனன?

அடுத்த மாதம் நடைபெற உள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேக பந்துவீச்சாளர் முகமது ஷமி தயாராகி வருகிறார். 

காயத்தில் இருந்து குணமடைந்த அவர், வலைப் பயிற்சியில் ஈடுபடத் துவங்கி இருக்கிறார். 

அவர் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்த்த நிலையில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். 

கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக வந்ததால் தான் அவர் முகமது ஷமி தற்போது பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

நடந்து முடிந்த இலங்கை சுற்றுப் பயணத்தில் கவுதம் கம்பீர் ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியில் அனைத்து வீரர்களும் ஆல் ரவுண்டர்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஒவ்வொரு போட்டியிலும்  ஐந்து முழு நேர பந்துவீச்சாளர்களுடன், இரண்டு பகுதி நேர பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். 

ஒரு நாள் தொடரிலும் ஒவ்வொரு போட்டியிலும் ஒன்று அல்லது இரண்டு பேட்ஸ்மேன்கள் பகுதி நேரமாக பந்து வீசியதுடன், இரண்டு ஆல் ரவுண்டர்களும் இருந்தனர்.

இதுதான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என கவுதம் கம்பீர் கூறியுள்ளதால், அனைத்து இந்திய வீரர்களும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை முடிந்த பின் தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக முகமது ஷமி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 

தற்போது அவர் உடற் தகுதியை பெற்றிருக்கும் நிலையில் பேட்டிங்கிற்கு ஏன் அவர் முக்கியத்துவம் அளிக்கிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், இதன் பின்னணியில் கவுதம் கம்பீர் இருக்கிறாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp