முகமது ஷமி தொடர்பில் பிசிசிஐ எடுத்த முடிவு.. அஸ்வினை தொடர்ந்து ஓய்வு பெறவும் வாய்ப்பு?

பெங்கால் அணி, டெல்லி அணிக்கு எதிராக தங்களுடைய முதல் ஆட்டத்தை ஹைதராபாத்தில் விளையாடும் நிலையில், இந்த போட்டியில் சமி பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமது ஷமி தொடர்பில் பிசிசிஐ எடுத்த முடிவு.. அஸ்வினை தொடர்ந்து ஓய்வு பெறவும் வாய்ப்பு?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமுது சமி பங்கேற்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது அது நடக்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

உடல் தகுதியை நிரூபிப்பதற்காக சமி தொடர்ந்து ரஞ்சி,சையது முஸ்தாக் அலி டி20 போட்டிகளில் விளையாடி வந்த நிலையில் சமிக்கு முட்டி காலில் வீக்கம் ஏற்பட்டு உள்ளதால், சமியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள மருத்துவர்கள் அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில், வரும் சனிக்கிழமை தொடங்க உள்ள விஜய் ஹசாரே கோப்பை தொடர்கான பெங்கால் அணியில் சமி முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

பெங்கால் அணி, டெல்லி அணிக்கு எதிராக தங்களுடைய முதல் ஆட்டத்தை ஹைதராபாத்தில் விளையாடும் நிலையில், இந்த போட்டியில் சமி பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சமி காயம் அதிகமாகாமல் இருப்பதற்காக அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு உள்ளதுடன், சமி திட்டமிட்டபடி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல மாட்டார் என்றும் இனி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தான் ஷமி தயார் ஆவார் என்றும் செய்தி வெளியாகி உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த கேப்டன் ரோகித் சர்மா, சமி எப்போது வருவார் என்று எனக்கு இன்னும் தகவல் வரவில்லை. அவருடைய உடல் தகுதி 100% எட்டி இருந்தால் நிச்சயம் அவர் அனைத்து திரும்புவார் என விளக்கம் கொடுத்தார்.

இந்த நிலையில் சமி இனி ஜனவரி மாதம் இறுதியில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் தான் திரும்புவார் என்றும், காயம் சரியாகாமல் போனால், அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp