24 பந்துகளில் 73 ரன்கள்… ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த சர்மா!
17வது ஐபிஎல் தொடரின் 40வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ரன்களை வாரி வழங்கியதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மோஹித் சர்மா மிக மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
17வது ஐபிஎல் தொடரின் 40வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ரன்களை வாரி வழங்கியதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மோஹித் சர்மா மிக மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது.
போட்டியின் முதல் 12 ஓவர்களில் பெரிதாக ரன் குவிக்காத டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடைசி ஓவர்களை மிக சரியாக பயன்படுத்தியதன் மூலமே டெல்லி அணியால் 200+ ரன்கள் எடுக்க முடிந்தது. இதில் குறிப்பாக டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் இந்த போட்டியில் தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசுரவேகத்தில் ரன்னும் சேர்த்தார்.
மோஹித் சர்மா வீசிய போட்டியின் கடைசி ஓவரில் 4 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியுடன் மொத்தம் 30 ரன்கள் குவித்து, மொத்தமாக 43 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் குவித்தார். அதே போல் அக்ஷர் பட்டேல் 66 ரன்களும், ஸ்டப்ஸ் 6 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.
இந்தநிலையில், போட்டியின் கடைசி ஓவரில் 31 ரன்கள் விட்டு கொடுத்ததோடு சேர்த்து மொத்தம் 4 ஓவர்களில் 73 ரன்கள் விட்டுகொடுத்த குஜராத் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான மோஹித் சர்மா, இதன் மூலம் ஐபிஎல் தொடரின் ஒரே போட்டியில் அதிகமான ரன்களை வாரி வழங்கிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற பெங்களூர் – ஹைதராபாத் இடையேயான போட்டியில், ஹைதராபாத் அணியின் பாசில் தம்பி 70 ரன்கள் விட்டுகொடுத்ததே இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது, தற்போது இதனை மோஹித் சர்மா முறியடித்து மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.
- மோஹித் சர்மா – 73/0 – 2024ம் ஆண்டு
- பாசில் தம்பி – 70/0 – 2018ம் ஆண்டு
- யஸ் தயால் – 69/0 – 2023ம் ஆண்டு
- ரீஸ் டாப்லி – 68/0