அதிக ரன்கள் பட்டியல்...  2ஆம் இடத்துக்கு தாவிய கோலி.. ரோஹித் சர்மா எந்த இடம் தெரியுமா?

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 4, விராட் கோலி 88 ரன்கள் குவித்தார்.

அதிக ரன்கள் பட்டியல்...  2ஆம் இடத்துக்கு தாவிய கோலி.. ரோஹித் சர்மா எந்த இடம் தெரியுமா?

இந்தியா - இலங்கை அணிகள் இடையே ஆன போட்டிக்கு பின் இந்தப் பட்டியலில் முக்கிய மாற்றமாக பின்தங்கி ஏழாவது இடத்தில் இருந்த விராட் கோலி இரண்டாம் இடத்துக்கு தாவி இருக்கிறார். அதே சமயம், 4 ரன்களில் ஆட்டமிழந்த ரோஹித் சர்மா ஒரு இடம் சரிந்து இருக்கிறார்.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 4, விராட் கோலி 88 ரன்கள் குவித்தார். சுப்மன் கில் 92, ஸ்ரேயாஸ் ஐயர் 82, கே எல் ராகுல் 21 ரன்கள் எடுத்தனர். இந்த நிலையில், போட்டிக்கு பின் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் விராட் கோலி, ரோஹித் சர்மாவை தவிர வேறு எந்த வீரரும் இடம் பெறவில்லை.

சுப்மன் கில் 33 வது இடத்தில் இருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர் 24வது இடத்திலும், கே எல் ராகுல் 17வது இடத்திலும் உள்ளனர். ரோஹித் சர்மா தற்போது 7 போட்டிகளில் 402 ரன்கள் குவித்து இந்தப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறார். விராட் கோலி 88 ரன்கள் அடித்ததன் மூலம் 7 போட்டிகளில் 442 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

புள்ளிப்பட்டியலில் உச்சத்திற்கு சென்ற இந்தியா.. அரையிறுதியில் எந்தெந்த அணிகள்?

2023 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 7 போட்டிகளில் 545 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்காவின் க்விண்டன் டி காக் முதல் இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் ரச்சின் ரவீந்திரா 7 போட்டிகளில் 415 ரன்களுடனும், நான்காம் இடத்தில் டேவிட் வார்னர் 6 போட்டிகளில் 413 ரன்களுடனும் உள்ளனர்.

முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பு விராட் கோலி மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு உள்ளது. எனினும், க்விண்டன் டி காக் அடுத்த போட்டியில் அதிக ரன் குவிக்காமல் இருந்தால் மட்டுமே மற்ற வீரர்களால் முதல் இடத்தையே பிடிக்க முடியும். விராட் கோலியை விட 103 ரன்கள் வித்தியாசத்தில் அவர் முன்னணியில் இருக்கிறார்.