இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெறுவாரா? வெளியாகும் தகவல்... உண்மை என்ன?

சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 17 ஆண்டுகளாக சிஎஸ்கே-வுக்கு எதிராக தோல்வியடைந்து வந்த மோசமான சாதனையை மாற்றி எழுதியது பெங்களூரு அணி. 

இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெறுவாரா? வெளியாகும் தகவல்... உண்மை என்ன?

18ஆவது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான எம். எஸ். தோனியின் பேட்டிங் வரிசை  மிகப்பெரிய சர்ச்சையாக உருவாகி உள்ளது.

கடந்த மார்ச் 28ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. இதில் முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்து 196 ரன்கள் அடித்தனர். பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. 

இதன் மூலம் சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 17 ஆண்டுகளாக சிஎஸ்கே-வுக்கு எதிராக தோல்வியடைந்து வந்த மோசமான சாதனையை மாற்றி எழுதியது பெங்களூரு அணி. 

இச்சுழலில் சென்னை அணிக்காக எம்.எஸ். தோனி 9வது வரிசையில் களம் இறங்கினார். இது ரசிகர்களுக்கு இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இதற்கு சென்னை அணியின் பயிற்சியாளரான பிளம்மிங், தோனி முன்பு போல் இல்லை. அவர் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தாலும் 8 அல்லது 9 ஓவர்களுக்கு மேல் அவரால் களத்தில் நின்று விளையாட முடியாது. அவரது பேட்டிங் வரிசையை அவரேதான் முடிவு செய்கிறார் என கூறியிருந்தார். பயிற்சியாளர் பிளம்மிங்கின் இந்த பேச்சு, ரசிகர்கள் பலருக்கு பல விதமான கேள்விகளை எழுப்பி உள்ளது. 

சிஎஸ்கே அணியின் வெற்றிக்காக தோனியால் சில ஓவர்கள் முன்பே இறங்கி பேட்டிங் செய்ய முடியவில்லை என்றால், முழங்கால் பிரச்சனையுடன் எதற்காக அவர் விளையாட வேண்டும்? என்கிறார்கள். 
அதேபோல், 2012 காலகட்டங்களில் சச்சின், சேவாக், கம்பீர் ஆகிய மூவரில் இருவருக்குதான் இடம் அளிக்க முடியும்.  ஏனென்றால், அவர்கள் மெதுவாக ஃபீல்டிங் செய்கிறார்கள். வயது காரணமாக அவர்களுக்கு இடையே சுழற்சி முறையை செய்தார் அப்போதைய கேப்டனாக இருந்த தோனி. 

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது இந்த சர்ச்சை நடந்தது. சேவாக், சச்சின் ஆகியோருக்கு ஒரு நியாயத்தை சொன்ன தோனி. தற்போது முழு உடல் தகுதி இல்லாமல் விளையாடலாமா? என கேள்வி எழுப்பி உள்ளனர். 

இது தொடர்பான பழைய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. அதில், உடல் தகுதி என்பது மிகவும் முக்கியம். முழு உடல் தகுதி இருந்தால் தான் அணியில் விளையாட முடியும். 

எனக்கு 100 சதவீதம் உடல் தகுதி இல்லை என தெரிந்தால், நான் வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பளித்து விட்டு, விலகி விடுவேன் என கூறியுள்ளார் எம்.எஸ். தோனி. 

இந்த நிலையில் தான் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எக்ஸ் தளத்தில் 'dhoni retirement' என ஹஸ்டக்கை டிரண்ட் செய்து வருகின்றனர். 

43 வயதாகும் நிலையில், எம். எஸ். தோனி சென்னௌ சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது வரை விளையாடி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.