43 வயதான நிலையில் மீண்டும் விளையாடுவது ஏன்? உண்மையை உடைத்த தோனி

ஐபிஎல் தொடரின் 18வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடுகின்றார். 43 வயதான தோனிக்கு இது கடைசி போட்டியாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

43 வயதான நிலையில் மீண்டும் விளையாடுவது ஏன்? உண்மையை உடைத்த தோனி

ஐபிஎல் தொடரின் 18வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடுகின்றார். 43 வயதான தோனிக்கு இது கடைசி போட்டியாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

இந்த நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி, தனது ஐபிஎல் பயணம் குறித்து பல்வேறு விடயங்களை பேசி உள்ளார்.

 "கடந்த சில ஆண்டுகளாக நான் விளையாடி வருகிறேன், இன்னும் எவ்வளவு நாட்கள் விளையாடுவேனோ தெரியாது, ஆனால் அவர்கள் காட்டும் அன்பும் ஆதரவும் வியக்கத்தக்கது.

இதையும் படியுங்கள்: விளையாடி கொண்டிருந்த போது, நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரர்!

ஒரு விளையாட்டு வீரராக, நீங்கள் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் ரசிகர்களின் பாராட்டுதான். நான் சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது விளையாடவில்லை, எனவே ஐபிஎல் தான் மிகப்பெரிய வாய்ப்பு.

உங்களுக்காக ரசிகர்கள் உற்சாகமாக காத்திருக்கிறார்கள், நீங்கள் ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் விருப்பமான அணிக்கு எதிராக விளையாடினாலும் கூட எனக்கு ஆதரவு தருகிறார்கள்."

"நான் களமிறங்கும்போது, அணி என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை புரிந்துகொள்கிறேன். சில பந்துகளே மீதம் இருந்தால், பெரிய ஷாட் ஆடி விளையாடுவது மட்டுமே என் குறிக்கோளாக இருக்கும். 

 'நீங்கள் 4 பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தாலும், 6வது பந்து "டாட்" ஆக இருந்தால், அது நமக்கு வெற்றி தரும் என்று பவுலர்களிடமும் நான் எப்போதும் கூறுவேன்.

அதே நேரத்தில், பேட்ஸ்மேன்கள் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது, முடியும் என்று நம்ப வேண்டும் என்று தோனி கூறினார்.