தோனி, ரோஹித் மற்றும் விராட் கோலி இப்படிப்பட்டவர்கள்... அஸ்வின் ஓபன் டாக்
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் சிறந்த கேப்டன்களாக விளங்கியவர்களாக மஹேந்திர சிங் தோனி, ரோஹித் ஷர்மா, மற்றும் விராட் கோலி இருக்கின்றனர். இந்த மூன்று பேரும் அவர்களின் தனித்துவமான தலைமைத்துவ முறை மூலம் அணியை முன்னேற்றியவர்களாக கருதப்படுகின்றனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் சிறந்த கேப்டன்களாக விளங்கியவர்களாக மஹேந்திர சிங் தோனி, ரோஹித் ஷர்மா, மற்றும் விராட் கோலி இருக்கின்றனர். இந்த மூன்று பேரும் அவர்களின் தனித்துவமான தலைமைத்துவ முறை மூலம் அணியை முன்னேற்றியவர்களாக கருதப்படுகின்றனர்.
இப்போது தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றாலும், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து கலக்கி வருகிறார். இதற்கிடையில், விராட் கோலி இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்துவர, ரோஹித் ஷர்மா இன்னும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்த சூழலில், இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய இந்த மூன்று கேப்டன்கள் குறித்தும், அவர்களிடமிருந்து அவர் பெற்ற அனுபவங்களை குறித்து அணியின் முக்கிய ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசினார்.
தோனி – நீண்டகால ஆதரவு
அஸ்வின் பேசியதாவது, "தோனியிடம் என்னக்கு மிகவும் பிடித்த விஷயம் அவரின் வீரர்களுக்கு நீண்டகால ஆதரவை அளிப்பது. ஒரு வீரரை அவர் ஒருமுறை கண்டறிந்து விட்டால், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார். எடுத்துக்காட்டாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு அவர் அளித்த வாய்ப்புகள் அவர்களை முன்னேற்றியது. தோனியின் இந்த நீண்டகால ஆதரவு அணிக்கு பயன் அளித்தது, மேலும் அவரது கூலான நடத்தை வீரர்களுக்கு மிகவும் உதவியாக அமைந்தது." என்றார்.
விராட் – உத்வேகம் மற்றும் முன்னோடித்தனம்
அடுத்து விராட் கோலியின் குறித்து அவர், "விராட் மிகவும் உத்வேகமாக இருப்பார். அவர் தமக்கு தாமே சவால்களை ஏற்படுத்தி, அதை சாதித்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பார். அது மற்ற வீரர்களையும் அவரைப் போலவே இருக்க வேண்டும் என தூண்டும். இந்த தன்னம்பிக்கை அவரை மிகப்பெரிய ஆளாக்கியது," என்றார்.
ரோஹித் – நுணுக்கமான திட்டமிடல்
"ரோஹித் சர்மா அணியின் சூழ்நிலையை மிருதுவாக வைத்திருப்பார். பெரிய தொடர்கள் மற்றும் போட்டிகள் வந்தால், அவர் பயிற்சியாளர் மற்றும் அனலைஸ்ட் குழுவுடன் இணைந்து எதிரணியின் பலவீனங்களை அடையாளம் கண்டு, அதற்கான மிகச்சிறந்த திட்டங்களை வகுக்க உதவுவார். அதோடு, வீரர்களுக்கு முழு ஆதரவை அளிப்பவர்," என்றார்.