தோல்விக்கு மீண்டும் காரணமான ஹர்திக் பாண்டியா: வீரர்களை புறக்கணிப்பதால் படுதோல்வி!
ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்றவர்களுக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது பிடிக்கவில்லை.
குஜராத் டைடன்ஸ் அணியை சிறப்பாக ஹர்திக் பாண்டியா வழிநடத்திய நிலையில், இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ட்ரேடிங் மூலம் வாங்கி அணிக்கு கேப்டனாக நியமித்தது.
ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்றவர்களுக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது பிடிக்கவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் ஆதரவு வீரர்கள், ரோஹித் சர்மா ஆதரவு வீரர்கள் என இரு குழுக்கள் இருக்கிறது.
இந்நிலையில், களத்தில் ரோஹித் ஆதரவு வீரர்கள், ஹர்திக் பாண்டியாவை தவிர்த்து ரோஹித் சர்மாவிடம்தான் ஆலோசனையை பெறுகிறார்கள்.
பாண்டியாவை தவிர்த்துவிட்டு ரோஹித்திடம் ஆலோசனை பெற்ற ஆகாஷ் மத்வாலை இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த போட்டியிலேயே ஹர்திக் நீக்கினார்.
மேலும், மும்பைக்கு முதல் ஓவரை பும்ராதான் வீசுவார் என்ற விதிமுறையை மாற்றி, ஹர்திக்கே ஓபனிங் ஓவரை வீசி வருகிறார். ஆனால், அவரது பந்துவீச்சில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
அணிக்குள் புகைச்சல் காரணமாக, ஹர்திக் பாண்டியாவுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால், பேட்டிங் பந்துவீச்சு, பீல்டிங், கேப்டன்ஸி என அனைத்திலுமேயே ஹர்திக் சொதப்பி வருகிறார்.
மும்பை அணி, தற்போதுவரை 8 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.
ஹர்திக் பாண்டியா இப்படி தொடர்ந்து படுமோசமாக சொதப்பி வருவதால், ஜூன் 1 முதல் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை 2024 தொடரில், ஹர்திக் சேர்க்கப்பட வாய்ப்பு குறைவு என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில், மும்பை அணி 16 ஓவர்களில் 151 ரன்களை அடித்திருந்தபோது களமிறங்கிய ஹர்திக் 10 பந்துகளில் 10 ரன்களைதான் அடித்தார். இந்த அழுத்தங்கள் காரணமாக, அதன்பிறகு வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
மேலும், பந்துவீச்சிலும் பாண்டியா ஓவருக்கு 10+ ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பினார். பார்ம் அழுத்தங்கள் காரணமாக, அவரால் சிறப்பாக கேப்டன்ஸி செய்ய முடியவில்லை.
இதனால், உற்சாகம் இழந்த வீரர்கள், பீல்டிங்கிலும் சொதப்பி வருகின்றனர். இந்த குறைகளை சரிசெய்யவில்லை என்றால், பிளே ஆப் செல்ல வாய்ப்பு குறைவாக தான் இருக்கும் என்று பார்க்கப்படுகின்றது.