ஐபிஎல் தொடரில் மும்பை அணி படைத்த மாபெரும் சாதனை.. யாரும் எதிர்பாராத சாதனை!

மும்பை இந்தியன்ஸ், அடுத்த ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, தற்போது அதிரடியாக மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது

Apr 28, 2025 - 15:15
Apr 28, 2025 - 15:16
ஐபிஎல் தொடரில் மும்பை அணி படைத்த மாபெரும் சாதனை.. யாரும் எதிர்பாராத சாதனை!

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஐந்து போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளதுடன், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற,  மற்றொரு ஐபிஎல் வரலாற்று சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி செய்துள்ளது.

2025 ஐபிஎல் தொடரின் தான் விளையாடிய முதல் 5 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்தது. 

எனினும், மும்பை இந்தியன்ஸ், அடுத்த ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, தற்போது அதிரடியாக மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

மொத்தம் பத்து போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், ஐபிஎல் வரலாற்றிலேயே 150 வெற்றிகளைப் பெற்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணிதான் ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணியாக உள்ளதுடன், மொத்தம் 271 போட்டிகளில் விளையாடி 150 வெற்றிகளையும் 121 தோல்விகளையும் சந்தித்துள்ளது.

இந்த பட்டியலில் அதிக வெற்றி பெற்ற இரண்டாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளதுடன்,  248 போட்டிகளில் 140 வெற்றிகள் மற்றும் 106 தோல்விகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. 
அத்துடன், இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை விட குறைவான போட்டிகளிலேயே விளையாடி உள்ளது.

வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஆனால் அதிகப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்தில் இருக்கின்றது.

மூன்றாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளதுடன், அந்த அணி 261 போட்டிகளில் 134 வெற்றிகளையும் 125 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 

இதேவேளை, இந்த மூன்று அணிகள் இதுவரை மொத்தமாக ஐபிஎல் தொடரில் 13 கோப்பைகளை வென்று உள்ளன.

ஏனைய அணிகளில், புதிய அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மட்டுமே தோல்விகளை விட அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளன.

இதேவேளை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் வெற்றிகளை விட அதிக தோல்விகளை சந்தித்த அணிகளாக உள்ளன.  அத்துடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி மற்றும் தோல்விகளை சரிசமமாகப் பெற்ற அணியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!