4ஆவது முறையாக சாம்பியனானது மும்பை அணி

61
Mumbai Indians defeated the Chennai Super Kings
colombotamil.lk

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று 4- வது முறையாக கோப்பையை வென்றது.

4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை அணி ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது,

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா நாணயசுழற்சியில் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்ளெனகன் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ஓட்டங்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்தது.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்.

151 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி களமிறங்கியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 88 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. மலிங்கா வீசிய 16 ஓவரில் பிராவோ ஒரு சிக்சர் வாட்சன் 3 பவுண்டரிகள் அடிக்க சென்னை அணி 16 ஓவரில் 108 ஓட்டங்கள் குவித்தது. வாட்சனுக்கு 3 பிடியெடுப்புகளை தவற விட்டனர் மும்பை இந்தியன்ஸ் அணி.

சென்னை அணிக்கு 18 பந்துகளில் 38 ஓட்டங்கள் தேவைப்பட்டது. குர்ணால் பாண்டியா வீசிய 17-வது ஓவரில் வாட்சன் 3 சிக்ஸ் விளாசினார். இதனால் சென்னை அணிக்கு 12 பந்துகளில் 18 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரின் 3-வது பந்தில் வாட்சன் ரன் அவுட் ஆனார். இதனால் கடைசி 2 பந்துகளுக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

சர்துல் தாகூர் 2 ரன்கள் அடிக்க கடைசி பந்துக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது சர்துல் தாகூர் அவுட் ஆனார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.