ரோஹித்தை நீக்கி இளம் வீரரை களமிறக்க ஹர்திக் திட்டம்.. பழிக்கு பழியா?

ஜூன் 1ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கி நடைபெறவுள்ளது. இதற்கான, இந்திய அணியை தேர்வுசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.

ரோஹித்தை நீக்கி இளம் வீரரை களமிறக்க ஹர்திக் திட்டம்.. பழிக்கு பழியா?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை புறக்கணிக்க ரோஹித் சர்மா முடிவு செய்த நிலையில், தற்போது ஐபிஎலில் ரோஹித்தை ஓரங்கட்ட ஹர்திக் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜூன் 1ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கி நடைபெறவுள்ளது. இதற்கான, இந்திய அணியை தேர்வுசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.

டி20 உலகக் கோப்பைக்கான அணிப் பட்டியலை, மே முதல் வாரத்தில் கொடுத்தாக வேண்டும். அதனால், அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணிக் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் மும்பை அணியில் இரு குழுக்களாக இருப்பதாக கூறப்படுகிறது. 

டி20 உலகக் கோப்பைக்கான அணித் தேர்வு மீட்டிங்கில், அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால், இனி வரும் அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களை, மிகச்சிறப்பாக வீச வேண்டும். இல்லையென்றால் ஷிவம் துபேவை தான் சேர்க்க வேண்டும் என ரோஹித் நிபந்தை போட்டிருப்பதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையி்ல், டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் தன்னை நேரடியாக தேர்வுசெய்ய முடிவு செய்ய மறுக்கும் ரோஹித் சர்மா மீது, ஹர்திக் பாண்டியா கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் இதனால், ஹர்திக்கை பழி வாங்க முடிவு செய்துள்ளாராம்.

ரோஹித் சர்மா, 17ஆவது சீசனோடு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக உள்ளதால், அவரது ஓபனர் இடத்தை, தற்போது இருந்தே நிரப்ப ஹர்திக் முடிவு செய்து, அதனை நேற்று இரவே மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில், ஒன்டவுன் இடத்தில் விளையாடிய, 24 வயது வீரர் நமன் தீரை, கடைசி சில லீக் போட்டிகளின்போது, ஓபனராக களமிறக்கி சோதித்து பார்க்க ஹர்திக் விரும்புகிறாராம். 

இதனால், கடைசி சில லீக் ஆட்டங்களில் ரோஹித்துக்கு ஓய்வு கொடுக்கப்படும் அல்லது 5ஆவது இடத்தில் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp