நட்சத்திர வீரர் அஸ்வின் கூட செய்யாத சாதனையை எட்டிப் பிடித்த இளம் வீரர்
இதுவரை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை 24 முறை எடுத்துள்ள நாதன் லயன், நியூசிலாந்தில் 5 விக்கெட் எடுப்பது இதுவே முதல் முறை.
நியூசிலாந்து மண்ணில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 383 ரன்களும், பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 179 ரன்களும் எடுத்திருந்தது.
அதிக ரன்கள் முன்னிலையுடன் இருந்த ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்சில் தங்களின் பேட்டிங்கில் தடுமாற, 164 ரன்களுக்கு அவர்கள் ஆல் அவுட்டாகினர். இதனைத் தொடர்ந்து 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வந்த நியூசிலாந்து அணி, முதலில் நன்றாக தான் பேட்டிங் செய்திருந்தது.
ரச்சின் ரவீந்திரா அரைச்சதம் அடுத்து அசத்தி இருந்த நிலையில் தான் திடீரென ஒரு கட்டத்துக்கு பின் போட்டி அப்படியே தலைகீழாக மாறி இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணமாக விளங்கியவர் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தான்.
டாம் லதாம், கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட முக்கிய விக்கெட்களுடன் மொத்தம் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்த லயன், ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறவும் முக்கிய பங்காற்றி இருந்தார். இந்த டெஸ்டில் மொத்தம் 10 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தி இருந்தார்.
இந்த நிலையில் தான் நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் மிக முக்கியமான ஒரு சாதனை பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார் நாதன் லயன்.
இதுவரை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை 24 முறை எடுத்துள்ள நாதன் லயன், நியூசிலாந்தில் 5 விக்கெட் எடுப்பது இதுவே முதல் முறை.
அப்படி இருக்கையில் தான், டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒன்பது நாடுகளில் வைத்து ஐந்து விக்கெட்களை எடுத்து சாதனை படைத்த மூன்றாவது வீரர் என்ற முக்கியமான பெருமையை பெற்றுள்ளார் நாதன் லயன்.
நாங்க ஒன்னும் ரோபோ கிடையாது.... பிசிசிஐயின் புது விதிமுறையை எதிர்த்த இளம் வீரர்...
முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே ஆகியோர் மட்டும் தான் இதற்கு முன்பாக, 9 நாடுகளில் ஐந்து விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தனர். அந்த பட்டியலில் தற்போது லயனும் இணைந்துள்ளார்.
இதில் முத்தையா முரளிதரன் ஆஸ்திரேலிய மண்ணிலும், ஷேன் வார்னே வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் 5 விக்கெட்டுகளை எடுத்ததில்லை.
அவர்கள் இருவருமே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எடுத்துள்ளனர். நாதன் லயன் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய ஒன்பது நாடுகளில் 5 விக்கெட் ஹால் எடுத்துள்ளார்.
நாதன் லயனை விட அஸ்வின் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ள போதிலும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒன்பது வெளிநாட்டு மண்ணில் இதனை அவரால் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.