இலங்கையில் தேசிய துக்க தினம் பிரகடனம்

திருத்தந்தை பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையை முன்னிட்டு இலங்கையில் இன்று (26) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Apr 26, 2025 - 11:32
இலங்கையில் தேசிய துக்க தினம் பிரகடனம்

திருத்தந்தை பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையை முன்னிட்டு இலங்கையில் இன்று (26) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு பொது நிர்வாக அமைச்சு, அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிக்கிரியை இன்று காலை புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெறவுள்ளதுடன், அவரது திருவுடல் இலங்கை நேரப்படி பிற்பகல் 01.30க்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

88 வயதான திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த திங்கட்கிழமை(21) நித்திய இளைப்பாறுதல் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!