Saturday, January 25, 2020.
Home சினிமா 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவையும் புறக்கணித்த நயன்தாரா

‘தர்பார்’ இசை வெளியீட்டு விழாவையும் புறக்கணித்த நயன்தாரா

ஹிந்தித் திரையுலகில் பல கோடி சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோயின்கள் கூட அவர்களது படங்கள் வெளிவரும் சமயத்தில் எல்லா பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் செல்வார்கள்.

தங்களை பிரமோஷன் செய்து கொள்வதைவிட படத்திற்கு பல கோடிகளை முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என நினைப்பார்கள்.

ஆனால், தமிழில் பல ஹீரோயின்கள் அப்படி செய்வதில்லை. குறிப்பாக நடிகை நயன்தாரா அவர் நடிக்கும் எந்த ஒரு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கும் செல்வதில்லை.

அண்மையில் கூட தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த ‘சைரா’ படத்தின் எந்த பிரமோஷன் நிகழ்ச்சிக்கும் அவர் வராதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இனி, தெலுங்கில் அவரை நடிக்க வைக்க வேண்டாம் என சில தயாரிப்பாளர்கள் முடிவெடுத்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனம், டாப் நடிகர், பெரிய இயக்குனர் என கூட்டணி சேர்ந்த ‘தர்பார்’ பட இசை வெளியீட்டு விழாவில் கூட நேற்று நயன்தாரா கலந்து கொள்ளாதது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது.

நயன்தாராவைத் தேடிச் சென்று தங்கள் படங்களில் நடியுங்கள் என சிலர் காத்துக் கொண்டிருப்பதாலேயே அவர் இப்படி செய்கிறார் என நேற்றைய விழாவில் சிலர் முணுமுணுத்ததைக் கேட்க முடிந்தது

இதயும் பாருங்க...

‘நெகிழ்வு தன்மையை முதலாளிமார் சம்மேளனம் கடைபிடிக்க வேண்டும்’

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் முதலாளிமார் சம்மேளனம் நெகிழ்வு தன்மையை கடைபிடிக்க வேண்டும் என நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று (23) இடம்பெற்ற புத்தக கண்காட்சி...

ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம்

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் தற்போது காணப்படும் சட்டத்தை திருத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அத்தியவசிய சேவைகளில் பணிபுரிவோருக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்குவதற்காக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சட்டத்துறைப் பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா...

இலங்கையர் மூவருக்கு டுபாய் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சமூக ஊடகங்கங்களில் இஸ்லாம் மார்க்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் மூவருக்கு டுபாய் நீதிமன்றம் தலா 5 இலட்சம் திர்காம் அபராதம் விதித்துள்ளது. அந்த பணத்தின் இலங்கை பெறுமதி தலா சுமார் இரண்டரை கோடி...

நீராட சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதவாச்சி, மஹதிவுல் வாவியில் நீராட சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மீட்கப்பட்டு மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 29 வயதுடைய எடவீரகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனே இவ்வாறு...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...
error: Content is protected !!