பேட்டிங் வரிசையை மாற்றுங்க..  பேட்டிங் வரிசை பலமாகும்... அஸ்வின் கருத்து

முஹமது சிராஜ் இந்த தொடரில் இடம் பெறாத நிலையில், இது தொடர்பாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின், கருத்து தெரிவித்துள்ளார். 

பேட்டிங் வரிசையை மாற்றுங்க..  பேட்டிங் வரிசை பலமாகும்... அஸ்வின் கருத்து

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் துணை கேப்டனாக சுப்மன் கில்லும்  அறிவிக்கப்பட்டுள்ள உள்ளதுடன், விக்கெட் கீப்பர்களாக கேஎல் ராகுல் ரிஷப் பண்ட் ஆகியோர் தேர்வாகி இருக்கிறார்கள்.

முஹமது சிராஜ் இந்த தொடரில் இடம் பெறாத நிலையில், இது தொடர்பாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின், கருத்து தெரிவித்துள்ளார். 

ரோகித் சர்மா, கில் இருக்கும் போது பலரும் ஜெய்ஸ்வால் எதற்கு அணியில் இருக்கிறார் என்று கேட்கிறார்கள். ஆனால் ஜெய்ஸ்வால் கடந்த 18 மாதங்களாக அதிக அளவு ரன்கள் சேர்க்கிறார். இதனால் ஜெய்ஸ்வால் கண்டிப்பாக அணியில் இடம் பெறுவது அவசியம். 

ரோஹித் சர்மாவும் ஜெய்ஸ்வாலும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். இதன் மூலம் இடதுகை,வலதுகை பேட்ஸ்மேன்கள் இடம்பெறுவார்கள். கில் மூன்றாவது வீரராக விளையாட வேண்டும் விராட் கோலி நான்காவது வீரராகவும், ஐந்தாவது இடத்தில் கே.எல். ராகுல் அல்லது பண்ட் இருவரின் ஒருவர் மட்டும் விளையாட வேண்டும் என அஸ்வின் கூறி உள்ளார்.

அத்துடன், ஆறாவது இடத்தில் ஹர்திக் பாண்டியாவும், ஏழாவது இடத்தில் அக்சர் அல்லது ஜடேஜா என இருவரில் ஏதேனும் ஒருவர் விளையாட வேண்டும் என்றும், எட்டாவது வீரராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை சேர்க்க வேண்டும் என்று அஸ்வின் குறிப்பிட்டிருக்கிறார். 

இதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாகும் என்றும், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஆர்ஸ்தீப் சிங், முகமது சமி மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெற வேண்டும் என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.

துணை கேப்டனாக கில் தேர்வு செய்யப்பட்டமைக்கு அஸ்வின் ஆதரவு தெரிவித்தமை குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அஸ்வின், “கில் என்ன எனக்கு மாமனா மச்சானா? அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை வைத்திருக்கிறார். நன்றாக விளையாட கூடியவர்” என்று கூறியுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp