12 பந்தில் 12 சிக்ஸர்.... வரலாறு படைத்த வீரர்.. யாரும் செய்யாத சாதனை... யார் இவர்?

நேபால் நாட்டு கிரிக்கெட் அணி வீரர் திபேந்திர சிங் ஆரி, சர்வதேச கிரிக்கெட்டில் 12 பந்தில் 12 சிக்ஸர்களை விளாசி, உலக சாதனை படைத்துள்ளார்.

12 பந்தில் 12 சிக்ஸர்.... வரலாறு படைத்த வீரர்.. யாரும் செய்யாத சாதனை... யார் இவர்?

நேபால் நாட்டு கிரிக்கெட் அணி வீரர் திபேந்திர சிங் ஆரி, சர்வதேச கிரிக்கெட்டில் 12 பந்தில் 12 சிக்ஸர்களை விளாசி, உலக சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில், 6 பந்தில் 6 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது வீரர் என்ற வரலாற்று சாதனையை திபேர்ந்திரசிங் ஆரி படைத்துள்ளார். ஆட்டத்தின், கடைசி ஓவரில் இந்த மெகா சாதனையை படைத்துள்ளார்.

கட்டார் அணிக்கு எதிரான போட்டியில் நேபால் அணி 19 ஓவர்களில் 174/7 ரன்கள் எடுத்திருந்தது. திபேந்திரசிங் 28 (15) ரன்களை அடித்திருந்தார். 

அப்போது, கடைசி ஓவரில், கம்ரான் கான் பந்துவீச்சில், திபேந்த்ரிசிங் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டதால், நேபால் அணி 210/7 ரன்களை குவித்தது. திபேந்திரசிங் 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கவில்லை.

முன்னதாக, சர்வதேச கிரிக்கெட்டில், 2007-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில், யுவராஜ் சிங் 6 பந்தில் 6 சிக்ஸர்களை அடித்திருந்தார். 

அடுத்து, 2021ஆம் ஆண்டில், கெய்ரன் பொல்லார்ட் 6 பந்தில் 6 சிக்ஸர்களை விளாசியிருந்தார். தற்போது, 3ஆவது வீரராக திபேந்திரசிங், இந்த சாதனையை படைத்துள்ளார்.

24 வயதாகும் திபேந்திரசிங், மொத்தம் 60 டி20, 55 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கிறார். இவர்,இதற்கு முன்பும், ஒருமுறை 6 பந்தில் 6 சிக்ஸர்களை அவர் அடித்துள்ளார்.

ஏசியன் கேம்ஸ் 2023 தொடரின்போது, மங்கோலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நேபால் அணி வீரர் திபேந்திரசிங், 6 பந்தில் 6 சிக்ஸர் அடித்திருந்தார். குறிப்பாக, 10 பந்திலேயே அரை சதம் அடித்து உலக சாதனை படைத்தார்.

அப்போட்டியில், நேபால் அணி பேட்டர்கள் தொடர்ந்து விளாசி இருந்தனர். இதனால், நேபால் அணி 314/3 ரன்களை குவித்தது. இலக்கை துரத்திக் களமிறங்கிய மங்கோலியா அணி 41 ரன்களுக்கு சுருண்டு, மகா தோல்வியை சந்தித்தது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில், இரண்டு முறை 6 பந்தில் 6 சிக்ஸர், அதாவது இரண்டு ஓவர்களில் 12 பந்துகளில் 12 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை திபேந்திரசிங் படைத்துள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp