Net bowler hit by David Warner | Practice session | Australia vs India Highlights | David Warner hit Net bowler | Tamil Sports Online

Net bowler hit by David Warner : ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் பயிற்சியின் போது, பந்துவீசியவரின் தலையில் பந்தை வேகமாக அடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் கடந்த 30ஆம் திகதி தொடங்கி, பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன.

ALSO SEE : நிதானமாக ஆப்கானிஸ்தானை காலி செய்து முதலிடத்தை பிடித்த நியூசிலாந்து

போட்டி மிகவும் முக்கியமானது என்பதால் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஆரோன் பின்ச், வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நீண்ட நேரம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

பயிற்சியின்போது டேவிட் வார்னருக்கு ஓவல் மைதானத்தில் உள்ள ஒரு வலைப்பயிற்சி பந்து வீச்சாளர் பந்து வீசி கொண்டிருந்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த வார்னர் ஒரு பந்தை விரட்டியடித்தார்.

Net bowler hit by David Warner |

அந்தப் பந்து எதிர்பாராத விதமாக பந்துவீச்சாளரின் தலையை பலமாக தாக்கியது. உடனே பந்துவீச்சாளரான ஜெய்கிஷன் பிளாஹா நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

பதறிப்போன வார்னர், அந்த பந்து வீச்சாளரை தேற்றினார். பின்னர் ஆஸ்திரேலிய அணியின் வைத்தியர் விரைந்து வந்து அப்பந்துவீச்சாளருக்கு தேவையான முதலுதவியை செய்தார். பின்னர், அந்த பந்துவீச்சாளரை ஸ்ட்ரெச்சரில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பில் அணித்தலைவர் ஆரோன் பின்ச் தெரிவிக்கையில், டேவிட் வார்னர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாகவும், எதிர்பாராதவிதமாக அவர் அடித்த பந்து, பந்துவீச்சாளரின் தலையை தாக்கியது. சிறிது நேரத்திற்கு பயிற்சி தடைபட்டது. பின்னர் நிலைமை சீரானது என்று கூறியுள்ளார்.