அன்று உணவு டெலிவரி செய்தவர்... இன்று நெதர்லாந்துக்காக சாதனை படைத்த வீரர்.. யார் தெரியுமா?

நெதர்லாந்து அணிக்கு அவ்வளவாக கிரிக்கெட் விளையாட வாய்ப்பு இருந்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றில் விளையாடிய நெதர்லாந்து அணி அதன் பிறகு தற்போது தான் விளையாடுகிறது.

அன்று உணவு டெலிவரி செய்தவர்... இன்று நெதர்லாந்துக்காக சாதனை படைத்த வீரர்.. யார் தெரியுமா?

நம் வாழ்வில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு நம்மால் சாதிக்க முடியும் என்பதற்கு பல ஹீரோக்கள் விளையாட்டு உலகில் இருக்கிறார்கள்.

நெதர்லாந்து அணிக்கு அவ்வளவாக கிரிக்கெட் விளையாட வாய்ப்பு இருந்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றில் விளையாடிய நெதர்லாந்து அணி அதன் பிறகு தற்போது தான் விளையாடுகிறது.

இதனால் நெதர்லாந்தை சேர்ந்த பல வீரர்களும் பல பணிகளை பார்ட் டைமாக செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சில வீரர்கள் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடி தங்களது வாழ்க்கையில் நடத்தி வருகின்றனர். 

அப்படி இருக்கும் போது 2020 ஆம் ஆண்டு கொரோனா இந்த உலகத்தையே தலை கீழ் புரட்டிப் போட்டது. இதில் விளையாட்டு உலகமும் வெகுவாக பாதிக்கப்பட்டது.

விளையாட்டுப் போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில், கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட சென்ற நெதர்லாந்து வீரர் பால் வான் மேக்கிரீன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். 

அப்போது தான் வாழ்க்கையைக் காப்பாற்ற அவருக்கு நமது ஊர் ஸ்விக்கி போல் அங்கு உணவு டெலிவரி செய்யும் வேலை கிடைத்தது. கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் பணம் தேவை என்பதற்காக அந்தப் பணியை செய்து கொண்டிருந்தார். 

அப்போது உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடந்திருக்க வேண்டிய தினம் இது என சமூக வலைத்தளத்தில் செய்தி ஒன்று போடப்பட்டிருந்தது. அதை மேற்கோள் காட்டிய பால் மேக்கிரீன் இந்நேரம் நான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பேன்.

ஆனால் விதி என்னை உணவு டெலிவரி செய்யும் வேலையை பார்க்க வைத்திருக்கிறது. எனினும் கவலைப்படாதீர்கள் மக்களே. மகிழ்ச்சியாக இருங்கள் என்று அவர் டிவீட் போட்டு இருந்தார். 

தற்போது மூன்று ஆண்டுகள் சரியாக கழித்து அதை பால் மேக்கிரீன், இன்று தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை தன்னுடைய அபாரமான பந்துவீச்சால் திணற வைத்தார். 9 ஓவர்கள் வீசி 40 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்களை பால் மேக்கிரீன் வீழ்த்தினார்.

தற்போது அவர் உணவு டெலிவரி செய்து வந்த பதிவை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து அவரை கொண்டாடி வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உணவு டெலிவரி செய்து வந்த வீரர் தற்போது சாதனை படைத்திருப்பது பல ரசிகர்களுக்கு நம்பிக்கையை இருக்கிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...