ஊடக அறம், உண்மையின் நிறம்!

2020 புத்தாண்டு வாழ்த்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், கவிதைகள்

நாம் எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த புத்தாண்டு வந்துவிட்டது. மக்கள் எல்லோரும் சந்தோஷ மனநிலைக்கு வந்துவிட்டனர். நாம் இந்த நூற்றாண்டின் 20 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம்.

இந்த 20 ஆண்டுகளில் எல்லாம் மாறிவிட்டது. 2000 ஆண்டில் நாம் கனவாகக் கண்ட பல விஷயங்கள் இன்று நினைவாகிவிட்டது.

இந்த புத்தாண்டிற்கு வாழ்த்து சொல்லும் முறை கூட அன்று நாம் கிரிட்டிங்ஸ் கார்டு, அல்லது போன் மட்டும் தான் செய்து வாழ்த்துக்களைச் சொல்ல வேண்டும்.

ஆனால் இன்று வாட்ஸ் அப், பேஸ்புக் டிக்டாக் எனப் பல விதமாகச் சமூகவலைத்தளங்கள் வந்துவிட்ட நிலையில் அந்த பதிவுகளின் மூலம் நொடிகளில் இந்த உலகிற்கே வாழ்த்துக்களைப் பகிரலாம் அப்படியான வாழ்த்துக்களைப் பகிர இதோ உங்களுக்காக சில பதிவுகள்

வாழ்த்துக்கவிதைகள் :

1. செல்வம் பெறுக, வறுமை நீங்க , சோகம் மறைந்து வளமை பிறக்க, அறிவும், துணிவும் அனைவரும் பெற்றிட நல்லோர் பெருகி உலகம் செழித்திட நடு இரவில் உதித்தெழுவாய் புத்தாண்டே…

2. மதங்கள் அற்ற ஒரு மாதம் பிறக்கட்டும் சாதிகள் அற்ற ஒரு சகாப்தம் பிறக்கட்டும் பெண்ணையும் ஆணையும் சமமாய் போற்றும் சரித்திர ஆண்டாய் இந்த புத்தாண்டு பிறக்கட்டும்

3. புதிய எண்ணங்கள்,
புதிய முயற்சிகள்,
புதிய உறவுகள்,
புதிய உணர்வுகள்,
புதிய நம்பிக்கை,

என அனைத்தும்
புதிதாய் பழைய சொந்தங்களோடு மலரட்டும் இந்த புத்தாண்டு..

4.நல்லவற்றை நினைப்போம், உதவிகள் பல செய்வோம்,
மனித நேயத்தைக் காப்போம், பொல்லாத காலம் எல்லாம் போனது என்று எண்ணி இனி வரும் புத்தாண்டை இனிமையாய் கழிப்போம்.

5. புதிதாய் பிறந்த புத்தாண்டு
குழந்தையை அன்பாய் வளர்த்து அர்த்தமுள்ளதாக்குவோம் !!
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

புகைப்படங்கள்:

Leave A Reply

Your email address will not be published.