திடீரென்று அதிரடிக்கு மாறிய நியூசிலாந்து: பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நிலை!

சாம்பியன்ஸ் டிராபி முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான துவக்கத்தில் நிதானமாக விளையாடிய நியூசிலாந்து அணி பிறகு காட்டடி அடித்து பெரிய ஸ்கோரை பதிவு செய்தனர்.

திடீரென்று அதிரடிக்கு மாறிய நியூசிலாந்து: பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட  நிலை!

சாம்பியன்ஸ் டிராபி முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான துவக்கத்தில் நிதானமாக விளையாடிய நியூசிலாந்து அணி பிறகு காட்டடி அடித்து பெரிய ஸ்கோரை பதிவு செய்தனர்.

இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், டிவோன் கான்வே 10 (17), கேன் வில்லியம்சன் 1 (2) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து, டேரில் மிட்செலும் 10 (24) பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை என்ற நிலையில், மறுபக்கம் ஓபனர் வில் யங் எவ்வித அழுத்தங்களையும் உணராமல் தொடர்ந்து, நிதானமாக விளையாடி வந்தார். 

இறுதியில், முதல் சதத்தையும் பூர்த்தி செய்த அவர், அதிரடியாக ஆர முற்பட்டு 107 (113) ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். தொடர்ந்து, டாம் லேதம் மற்றும் கிளென் பிலிப்ஸ் இருவரும் துவக்கத்தில் நிதானமாக விளையாட ஆரம்பித்தார்கள். 

இதனால், நியூசிலாந்து அணி, 40 ஓவர்களில் 207 ரன்களை எடுத்ததுடன், நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் 270 ரன்களை எடுக்கும் எனக் கருதப்பட்டது.

ஆனால், 43ஆவது ஓவர் முடிந்தப் பிறகு, லேதம் மற்றும் கிளென் பிலிப்ஸ் இருவரும், அதிரடியாக விளையாட ஆரம்பிக்க ஸ்கோர் கிடுகிடுவென உயர ஆரம்பித்தது. 

குறிப்பாக 44 மற்றும் 45 ஆகிய இரண்டு ஓவர்களிலும் தலா 16 ரன்கள் என 12 பந்துகளில் 32 ரன்களை குவித்து அசத்தினார்கள். இப்படி, கடைசி 7 ஓவர்களில் மட்டும் 96 ரன்களை குவித்து அசத்தியதால், நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 320 ரன்களை குவித்தது. 

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் சதம் விளாசிய டாம் லாதம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்களான டாம் லாதம், வில் யங் ஆகியோர் சாதனை படைத்துள்ளனர். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வில் யங், டாம் லாதம் ஆகியோரையும் சேர்த்து இதுவரை 5 நியூசிலாந்து வீரர்கள் சதம் அடித்துள்ளனர். 

ஏற்கனவே கிறிஸ் கெய்ன்ஸ், நாதன் ஆஸ்டில், கேன் வில்லியம்சன் ஆகியோர் சதம் அடித்து இருக்கிறார்கள். வில் யங், டாம் லாதம் ஆகியோருக்கு இது தான் முதலாவது சாம்பியன்ஸ் கோப்பை போட்டியாகும். சாம்பியன்ஸ் கோப்பையில் தங்களது அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர்கள் இவர்கள் தான். 

மொத்தத்தில் அறிமுக ஆட்டத்தின் சதம் 10 ஆக உயர்ந்துள்ளது. சாம்பியன்ஸ் கோப்பையில் ஒரே இன்னிங்சில் இரு வீரர்கள் சதம் காண்பது இது 5-வது தடவையாகும்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp