ரோகித் சர்மா குறித்து எந்த கவலையும் இல்லை... விராட் விளையாடுவார்.. பும்ராவை கைவிரித்த பயிற்சியாளர்.. 

கோலிக்கு பதில் யார் அணியை விட்டு செல்வார்கள் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அதனை பயிற்சியாளரும் கேப்டனும் தான் தீர்மானிப்பார்கள் என்றும் கூறினார்.

ரோகித் சர்மா குறித்து எந்த கவலையும் இல்லை... விராட் விளையாடுவார்.. பும்ராவை கைவிரித்த பயிற்சியாளர்.. 

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிலையில், இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்வதை ஒடிசா மக்கள் பார்வையிட இலவச அனுமதி வழங்கப்பட்டது. சுமார் 10,000 மேற்பட்ட ரசிகர்கள் இந்திய வீரர்கள் பயிற்சி செய்ததை பார்த்தனர்.

இந்த நிலைளில் செய்தியாளிடம் பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சோ கோட்டாக், விராட் கோலி முழு உடல் தகுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளதுடன்,  இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் விளையாடுவது உறுதி என்றார்.

அத்துடன், கோலிக்கு பதில் யார் அணியை விட்டு செல்வார்கள் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அதனை பயிற்சியாளரும் கேப்டனும் தான் தீர்மானிப்பார்கள் என்றும் கூறினார்.

மேலும், ரோகித் சர்மா பேட்டிங்கில் தடுமாறுவது போல் தெரியவில்லை என்றும் ரோகித் கடைசியாக விளையாடிய மூன்று ஒரு நாள் போட்டிகளில் சராசரியாக 50 ரன்கள் அடித்துள்ளதுடன், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டின் 31 சதம் அடித்திருக்கிறார் என்பதை மறந்து விட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சில சமயம் வீரர்கள் சிறிது காலம் தடுமாறுவார்கள். ஆஸ்திரேலிய மைதானங்களில் ரோகித் சர்மா தடுமாறியது உண்மைதான். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். எனவே ரோகித் சர்மா குறித்து எந்த கவலையும் அணியில் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணி தற்போது நல்ல முறையில் இருக்கின்றது என்றும், பிளேயிங் லெவனில் வேறு ஏதேனும் வீரர் புதிதாக வருவார்களா என்பது குறித்து கேப்டனும் பயிற்சியாளரும் தான் அறிவிப்பார்கள் என்றும், சமி நல்ல உடல் தகுதியுடன் உள்ளதுடன், பும்ரா உடல் தகுதி என்ன என்று இதுவரை தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp