இஷான் கிஷனுக்கு ஆப்பு வைத்த ரோகித்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சில நாட்களுக்கு முன்பாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் சந்தித்தனர். 

இஷான் கிஷனுக்கு ஆப்பு வைத்த ரோகித்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை நடக்கவுள்ளது. ஜூன் 1ஆம் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் தொடங்கவுள்ளது. 

சில நாட்களுக்கு முன்பாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் சந்தித்தனர். 

அப்போது டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், 20 வீரர்களை கொண்ட இந்திய அணியின் உத்தேசப் பட்டியல் தெரிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த பட்டியலில் விக்கெட் கீப்பர்களுக்கான இடத்துக்கு ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் விளையாடிய ஜித்தேஷ் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை.

அதேபோல் மும்பை அணிக்காக ஆடி வரும் தொடக்க வீரர் இஷான் கிஷனின் பெயரும் சேர்க்கப்படவில்லை. இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள இஷான் கிஷன், 161 ரன்களை விளாசி இருக்கிறார்.

சிஎஸ்கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்... ஏற்பட்டுள்ள சிக்கல்... அந்த போட்டி வரைக்கும் இருப்பாரா?

அணுகுமுறையை மாற்றி அதிரடியாக விளையாடி வரும் இஷான் கிஷன் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால் இஷான் கிஷன், பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தியும் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாமல் இருந்ததே அவர் தேர்வு செய்யப்படாததற்கு காரணமாக கூறப்படுகிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp