Sri Lanka 24 Hours Online Breaking News

அதிரடி காட்டும் ‛நோ டைம் டூ டை’ டிரைலர்

0

No Time to Die Trailer

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் வெளியாக உள்ள 25ஆவது படமான ‛நோ டைம் டூ டை டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் நடிக்கும் நடிகரே ஹாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகராக கருதப்படுகிறார்.

அடுத்து வருகிற ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இந்தப் படம் ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25வது படம்.

‛நோ டைம் டூ டை என்ற பெயரில் தயாராகி உள்ள இப்படத்தை கேரி ஜோஜி புகுனகா இயக்குகிறார். ‛கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த டேனியல் கிராக் இதிலும் ஜேம்ஸ் பாண்டாக தொடருகிறார்.

இப்படத்தில் நடிக்க மாட்டேன் என கூறியதால் புதிய ஜேம்ஸ்பாண்ட் நடிகரை தேடி வந்தனர். இறுதியில் டேனியலே நடித்தார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தில் படப்பிடிப்பு உள்ள நிலையில் தற்போது இதன் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.

டேனியல், அதே பிரிட்டிஷ் நாட்டு உளவாளி கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். ஹாலிவுட் நடிகர் ராமி மலக் இப்படம் மூலம் முதன்முறையாக வில்லன் பாத்திரம் ஏற்றுள்ளார். வழக்கமான அதிரடி, ஆக்ஷன் மற்றும் ஜேம்ஸ் பாண்டிற்கே உரிய ஸ்டைல் உடன் டிரைலர் வெளியாகி உள்ளது.

அரைநிர்வாண படத்தை வெளியிட்ட ‘பாலா’ நாயகி

மெட்ரோ கோல்டன் மேயர், ஈயான் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம், முந்தைய ஜேம்ஸ் பாண்ட் படங்களை விட அதிக பட்ஜெட்டில் தயாராகிறது. அடுத்து ஆண்டு ஏப்ரலில் வெளியிடுகின்றனர். ஆங்கிலம் தவிர்த்து இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like