வாயை பொத்தி கதறி அழுத ஓவியா... என்ன ஆச்சு.. ?
சமீப காலமாக வெப்சீரிஸ் ஒன்றில் நடித்திருப்பதாக பேட்டி அளித்து வந்த ஓவியா ஒருவழியாக அந்த வெப்சீரிஸை விரைவில் வெளியிட உள்ளார்.
நடிகை ஓவியாவுக்கு பிக் பாஸ் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் இன்னமும் உள்ளனர்.
சமீப காலமாக வெப்சீரிஸ் ஒன்றில் நடித்திருப்பதாக பேட்டி அளித்து வந்த ஓவியா ஒருவழியாக அந்த வெப்சீரிஸை விரைவில் வெளியிட உள்ளார்.
சிவிங்கம் எனும் டைட்டிலில் உருவாகி உள்ள அந்த வெப்சீரிஸின் முதல் எபிசோடு வரும் அக்டோபர் 20ம் தேதி யூடியூப் சேனல் ஒன்றில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்.
சினிமா பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் ஓவியா. கடந்த ஒரு மாத காலமாக அதனை ப்ரோமோட் செய்ய பல பேட்டிகளை கொடுத்து வந்த நிலையில், தற்போது தான் அதன் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.
வெப்சீரிஸ்கள் பொதுவாக ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில், ஓவியாவின் இந்த சிவிங்கம் வெப்சீரிஸை எந்தவொரு ஓடிடி சேனலும் வாங்காத நிலையில், மைண்ட் டிராமா ப்ரொடக்ஷன்ஸ் எனும் யூடியூப் சேனலில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
விஜய் நடித்துள்ள லியோ படம் அக்டோபர் 19ம் தேதி வியாழக்கிழமை வெளியாக உள்ள நிலையில், வரும் அக்டோபர் 20ம் தேதி ஓவியா நடித்த சிவிங்கம் வெப்சீரிஸின் முதல் எபிசோடு வெளியாக போகிறதாம்.
ஒவ்வொரு வாரமும் ஒரு எபிசோடை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். விமல் நடித்த விலங்கு வெப்சீரிஸ் அவருக்கு கைகொடுத்த நிலையில், ஓவியாவுக்கு இந்த சிவிங்கம் கை கொடுக்குமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.