பாகிஸ்தானுடன் விளையாட முடியாது... ஒன்றாக மேட்ச் வைக்காதீர்கள்! ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்ஹாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

Apr 25, 2025 - 18:56
பாகிஸ்தானுடன் விளையாட முடியாது... ஒன்றாக மேட்ச் வைக்காதீர்கள்! ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்ஹாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை பிடித்து கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு தண்டிப்போம் என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்நிலையில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், எதிர்கால போட்டிகளில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே குழுவில் இணைக்க வேண்டாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒவ்வொரு முறையும் ஒரே குழுவில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இனி அது நடக்கக்கூடாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பாகிஸ்தானுக்கு எதிராக எந்த இருதரப்பு தொடரிலும் இந்தியா விளையாடாது என்று உறுதிப்படுத்தினார். 

இந்தியாவை பொறுத்தவரை 2029ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் நேரடியாக கிரிக்கெட் விளையாடுவதில்லை. ஆசிய கோப்பை கிரிக்கெட்டை பாகிஸ்தான் நடத்திய போதும், இந்தியா அங்கு செல்ல மறுத்தது இலங்கை சென்று விளையாடியது.

தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் நடத்திய நிலையில்,  இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாமல் புறக்கணித்து தங்களுக்குரிய போட்டிகளை துபாயில் விளையாடி கோப்பையையும் தனதாக்கியது. 

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக நடைபெற்ற BCCI உடனான முன் ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் தனது ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே விளையாடும். 

BCCI இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆண்கள் ஆசிய கோப்பையை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியை நடுநிலையான இடத்தில் நடத்துவதை அதிகாரிகள் முன்பே உறுதிப்படுத்தியுள்ளனர், 
ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இணைக்கப்படுமா அல்லது தனித்தனியாக இணைக்கப்படுமா என்பதைப் பார்க்க வேண்டும். 

செப்டம்பர் மாதம் போட்டிக்காக ஒதுக்கப்பட்ட காலக்கெடு. இதற்கிடையில் பிசிசிஐ இன்னும் போட்டி நடைபெறும் இடத்தை அறிவிக்கவில்லை. இப்போதைக்கு இந்தியாவுகும், பாகிஸ்தானுக்கும் இடையில் ICC போட்டிகள் எதுவும் இல்லை. இந்த ஆண்டின் பிற்பகுதியில் மகளிர் ஓடிஐ உலகக் கோப்பை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!