கால்களை தொடலாமா.. வேண்டாம்... மரியாதை கொடுத்து விலகிய பாபர் அசாம்!
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது.
உலகக்கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடிய நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது.
பாபர் அசாம் 92 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார். பாபர் அசாம் அரைசதம் விளாசிய போது, சேப்பாக்கம் மைதானமே அதிரும் அளவிற்கு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.
இந்த நிலையில் பாபர் அசாம் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவரின் ஷூ லேஸ் அவிழ்ந்தது. பாபர் அசாம், யாரின் உதவியையும் நாடாமல் கைகளில் அணிந்திருந்த கிளஸை கழற்றிவிட்டு ஷூ லேஸை கட்ட முயற்சித்தார்.
இதன்போது, இதனை பார்த்த ஆஃப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரர் முகமது நபி, அவருக்கு உதவி செய்ய முன் வந்தார்.
ஷூ லேஸை கட்ட நேரடியாக நபி முயற்சித்த போது உடனடியாக கால்களை நகர்த்தி பாபர் அசாம் அவராகவே ஷூ லேஸை கட்டி கொண்டார்.
எதிரணியை சேர்ந்த வீரர் என்றாலும் மூத்த வீரர் என்ற மரியாதையுடன் பாபர் அசாம் செயல்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகின்றது.