ஒரு சிக்சருக்கு 1,168 பந்துகளா.. வரலாறு படைத்த பாகிஸ்தான் அணி!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி ஒரு சிக்சரை விளாசுவதற்கு 1,168 பந்துகளை எடுத்துக் கொண்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

ஒரு சிக்சருக்கு 1,168 பந்துகளா.. வரலாறு படைத்த பாகிஸ்தான் அணி!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி ஒரு சிக்சரை விளாசுவதற்கு 1,168 பந்துகளை எடுத்துக் கொண்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடியுள்ள 4 போட்டிகளில் 4 விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் உள்ளது. இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததற்கு அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். 

கடந்த ஆண்டு முதல் பேட்டிங்கின் போது பவர் பிளே ஒவர்களில் பாகிஸ்தான் அணி தரப்பில் ஒரு சிக்ஸ் கூட அடிக்கப்படவில்லை. நடப்பாண்டில் மட்டும் பாகிஸ்தான் அணி 20 இன்னிங்ஸ்களில் விளையாடி 1202 பந்துகளை எதிர்கொண்டுள்ளது. 

அதில் மொத்தமாக 789 டாட் பால்கள், 131 பவுண்டரிகள் என்று 933 ரன்களை குவித்துள்ளது. மறந்து கூட பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை.

இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் 1,168 பந்துகளுக்கு பின் பாகிஸ்தான் அணியின் தரப்பில் பவர் பிளேவில் சிக்சர் அடிக்கப்பட்டுள்ளது. 

நவீன் உல் ஹக் வீசிய 5வது ஓவரில் பாகிஸ்தான் அணியின் இளம் தொடக்க வீரர் அப்துல்லா சஃபீக் ஸ்கொயர் லெக் திசையில் அபாரமாக ஒரு சிக்சரை விளாசி அசத்தினார்.

அதன்பின் மீண்டும் 8வது ஓவரில் முஜீப் உர் ரஹ்மான் பந்துவீச்சில் லாங் ஆன் திசையில் சஃபீக் அசத்தலான சிக்சரை விளாசினார். இதன் மூலமாக பாகிஸ்தான் அணியின் மோசமான சாதனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் அண்மை காலங்களில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பவர் பிளே ஓவர்களில் மோசமாக விளையாடியதே காரணமாக அமைந்துள்ளது.

ஆனால் பேட்டிங்கிற்கு கடினமாக இருக்கும் சென்னை மைதானத்தில் பாகிஸ்தான் அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களை எடுத்துள்ளது. 

உலகக்கோப்பை தொடருக்கு முன்பு வரை இமாம் உல் ஹக் - ஃபகர் ஜமான் கூட்டணி தொடக்கம் கொடுத்து வந்த நிலையில், தற்போது அப்துல்லா சஃபீக் - இமாம் உல் ஹக் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp