முதல் முறையாக தோல்வி... மோசமான சாதனை... காரணமே அதுதான்.. அரையிறுதி குறித்து பாபர் அசாம்!
அதேபோல் உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து மோசமான சாதனையை தன்வசப்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் அடுத்த 3 போட்டிகளை வென்ற பின்னர் தான் அரையிறுதி வாய்ப்பை பற்றி யோசிக்க முடியும் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் போட்டியில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
அதிகபட்சமாக ஷகீல் 52 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களும் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஷம்சி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்து த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.
இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடருக்கான புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
இதுவொரு பக்கம் இருக்க 1999ஆம் ஆண்டு உலகக்கோப்பை பின் தென்னாப்பிரிக்கா அணியிடம் முதல் முறையாக பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது.
அதேபோல் உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து மோசமான சாதனையை தன்வசப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பும் கேள்விக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேசுகையில், நூலிழையில் வெற்றியை தவறைவிட்டுள்ளோம்.
எங்களால் சிறப்பாக முடிக்க முடியவில்லை. ஒட்டுமொத்த அணிக்கும் இந்த தோல்வி ஏமாற்றத்தை அளித்துள்ளது. நிச்சயம் சிறந்த போராட்டத்தை களத்தில் வெளிப்படுத்தினோம்.
ஆனால் பேட்டிங்கில் நிச்சயம் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்தோம். வேகப்பந்துவீச்சாளர்களும், சுழற்பந்துவீச்சாளர்களும் பவுலிங்கின் போது சிறப்பாக போராடினார்கள்.
வெற்றியும், தோல்வியும் விளையாட்டின் ஒரு அங்கம் தான். அதேபோல் டிஆர்டிஸ் ரிவ்யூவும் போட்டியின் ஒரு அங்கம் தான். ஒருவேளை கடைசி விக்கெட்டுக்கு நடுவர் அவுட் கொடுத்திருந்தால், முடிவு எங்களுக்கு சாதகமாக இருந்திருக்கும்.
இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வாய்ப்பு கிடைத்தும், கடைசியில் தவறவிட்டுள்ளோம். அடுத்த 3 போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற முயற்சிப்போம். அதன்பின் தான் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வுயை பொறுத்து அரையிறுதி வாய்ப்பு அமையும் என்று தெரிவித்துள்ளார்.