இந்திய திரைப்படங்களை திரையிட பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சிறப்பு உதவியாளர் பிர்தோஸ் ஆஷிக் அவான் கூறுகையில், ‘பாகிஸ்தானில் இந்திய படங்களை திரையிடக்கூடாது. அனைத்து வகையான இந்திய கலாசார நடவடிக்கைகளையும் தடை செய்வதற்கான கொள்கையை அரசாங்கம் வகுத்து வருகிறது’ என்றார்.

இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் மிகவும் பிரபலமாக உள்ளன. அந்த நாட்டில் திரையரங்குகளின் மொத்த வருவாயில் 70 சதவீதம் பொலிவுட் படங்கள் மூலம் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.