மழை வந்து காப்பாற்றியது.. அதிரடி விளையாட்டுக்கு கிடைத்த பரிசு... பாக்கிஸ்தான் வீரர்
இந்த போட்டியில் 402 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி துரத்தியபோது 25.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 200 ரன்களுக்கு ஒரு விக்கெட்டுகளை இழந்து விளையாடியது.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான முக்கிய லீக ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் டக் வொர்த் லூயிஸ் விதிப்படி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 402 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி துரத்தியபோது 25.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 200 ரன்களுக்கு ஒரு விக்கெட்டுகளை இழந்து விளையாடியது.
அப்போது மழை குறிக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த போட்டியில் ஃபக்கர் சாமான் 81 பந்தில் 126 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரிகளும், 11 சிக்ஸர்களும் அடங்கும்.
இந்த தொடரில் பக்கர் சமான் சரியாக விளையாடவில்லை என சில போட்டிகளில் உட்கார வைக்கப்பட்டார். ஆனால் தற்போது தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்திருக்கிறார்.
இதனை அடுத்து ஆட்டநாயகன் விருதை வென்ற பக்கர் சமான் பேசுகையில், நாங்கள் 400 ரகளை சேசிங் செய்து விளையாடிக் கொண்டிருந்தோம்.
அப்போது எங்களுடைய திட்டம் ஒன்றே ஒன்றாக இருந்தது.முதல் நான்கு ஓவரில் கொஞ்சம் பொறுப்பாக விளையாடியிட்டு அதன் பிறகு அதிரடியாக விளையாட வேண்டும் என்ற திட்டத்தில் இருந்தோம்.
அதிர்ஷ்டவசமாக இது என்னுடைய நாளாக அமைந்தது. நான் உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் சில முறை எனக்கு அதிர்ஷ்டம் மட்டுமே கை கொடுத்தது.
இதனால் இந்த இன்னிங்ஸை நான் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். இனி எங்களுடைய ஆட்டம் அனைத்துமே வாழ்வா சாவா என்ற கட்டத்தில் தான் இருக்கிறோம் என்று எங்களுக்கு தெரியும். இதனால்தான் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் அதிரடியாக விளையாட முடிவு செய்தோம்.
இது என்னுடைய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நான் விளையாடிய சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. ஆனால் எப்போதுமே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நான் நடித்த 193 ரன்களை தான் நான் உயர்வாக வைப்பேன்.
ஆனால் இந்த இன்னிங்ஸை நான் மறக்க மாட்டேன். ஏனென்றால் நியூஸிலாந்தும் சாதாரண ஒரு அணி கிடையாது.எனவே இது நிச்சயம் நான் ஆடிய சிறந்த இன்னிங்ஸில் ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால் மழை குறுக்கிட்ட பிறகு இனி போட்டி தொடங்கக்கூடாது என்று நான் வேண்டிக் கொண்டு இருந்தேன்.
ஏனென்றால் இன்றைய நாள் 9 மணி நேரத்திற்கு மேல் நாங்கள் களத்தில் இருந்தோம். நிச்சயமாக இன்றைய நாளில டக்வொர்த் லூயிஸ் விதி அமலுக்கு வரும் என்று எங்களுக்கு தெரியும்.
அதனால் தான் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே அதிரடியாக விளையாடினோம். இனிவரும் போட்டியிலும் அதிரடி காட்டுவோம் என பக்கர் சமான் கூறினார்.