புள்ளி பட்டியலில் முன்னேறிய பாகிஸ்தான்.. அரையிறுதி பந்தயம் சூடு பிடித்தது!

இதனைத் தொடர்ந்து ஐசிசி உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

புள்ளி பட்டியலில் முன்னேறிய பாகிஸ்தான்.. அரையிறுதி பந்தயம் சூடு பிடித்தது!

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி நடப்பு தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த பங்களாதேஷ் அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட் களையும் இழந்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 32.3 ஓவரில் 205 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் ரன் ரேட்டும் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஐசிசி உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

ஏழு போட்டியில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 6 புள்ளிகள் உடன் மைனஸ் 0.02 என்ற அளவில் இருக்கிறது. பாகிஸ்தான் முன்னேறியதை அடுத்து ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது இடத்திற்கு சரிந்துள்ளது.

இலங்கை அணி ஏழாவது இடத்திலும் நெதர்லாந்து அணி எட்டாவது இடத்திலும் பங்களாதேஷ் அணி ஒன்பதாவது இடத்திலும் இங்கிலாந்து அணி பத்தாவது இடத்திலும் உள்ளது. 

இந்த தோல்வியின் மூலம் பங்களாதேஷ் அணி உலக கோப்பை தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. இந்த ஆட்டத்தின் முடிவால் முதல் நான்கு இடத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இந்தியா 12 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தென்னாப்பிரிக்கா 10 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து 8 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்திலும், ஆஸ்திரேலியா 8 புள்ளிகள் உடன் நான்காவது இடத்திலும் உள்ளது.

பாகிஸ்தான அணி இன்னும் எஞ்சியிருக்கும் 2 போட்டிகளில் வெற்றி பெற்று ஆக வேண்டும். அதன் பிறகு சில போட்டிகள் பாகிஸ்தானுக்கு சாதகமாக முடிவடைய வேண்டும். 

இல்லை என்றால் பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு செல்ல முடியாது. இதனால் ஏற்கனவே முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் தான் அரையிறுதிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp