இனி பாகிஸ்தானின் ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.. மிக்கி ஆர்த்தர்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி முழு திறமையை வெளிப்படுத்தவில்லை என்பது உண்மை தான். ஆனால் கடந்த போட்டியில் தான் நிறைவான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம்.

இனி பாகிஸ்தானின் ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.. மிக்கி ஆர்த்தர்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. 

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளது. 
அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், பாகிஸ்தான் அணி 2 போட்டிகளையும் சிறந்த ரன் ரேட்டுடன் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றிபெற்றுள்ளதால் பாகிஸ்தான் அணி வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் இயக்குநர் மிக்கி ஆர்த்தர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதன்போது,  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி முழு திறமையை வெளிப்படுத்தவில்லை என்பது உண்மை தான். ஆனால் கடந்த போட்டியில் தான் நிறைவான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம்.

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். கடந்த சில போட்டிகளில் ஏதேனும் ஒரு துறையில் தவறுகளை செய்து வந்தோம். 

ஆனால் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். சரியான நேரத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார்கள். நாளுக்கு நாள் அவர்களின் ஆட்டமும், நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது. நியூசிலாந்து அணியை தென்னாப்பிரிக்கா வீழ்த்தியது எங்களுக்கான வாய்ப்பை கொடுத்துள்ளது.

எல்லாம் முடிவடைந்தவிட்டது, எங்கள் கைகளில் எதுவுமில்லை என்று நினைத்த போது தான், மீண்டும் வாய்ப்பு கைகளில் கிடைத்துள்ளது. இதுவரை பாகிஸ்தான் வீரர்கள் இந்திய மண்ணில் விளையாடியதில்லை. பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கொல்கத்தா மைதானங்களை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்துள்ளார்கள். 

அதனால் ஆடுகளம் மற்றும் சூழலுக்கு ஏற்ப தயாராவதற்கு வீரர்கள் கொஞ்சம் நேரம் எடுத்து கொள்வது சாதாரணம் தான் ” என தெரிவித்துள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp