நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மனது வைத்தால்.. அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு

அந்த அணி இன்னும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகளை சந்திக்க வேண்டும். அதில் ஒன்றில் வென்றால் கூட பாகிஸ்தான் அணிக்கு சிக்கல் தான்.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மனது வைத்தால்.. அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மனது வைத்தால் பாகிஸ்தான் அணியால் அரை இறுதி செல்ல முடியும். ஆனால், அது நடப்பது நூறில் ஒரு சதவீதம் மட்டுமே சாத்தியம்.

தற்போது உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் அணி ஆறு போட்டிகளில் ஆடி இரண்டு வெற்றிகளை மட்டும் பெற்று 4 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. 

தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் 10 புள்ளிகளை பெற்று முதல் இரண்டு இடங்களில் உள்ளன. ஒருவேளை பாகிஸ்தான் இனி மீதமுள்ள மூன்று லீக் போட்டிகளில் வங்கதேசம், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளை வென்றால் மொத்தம் 10 புள்ளிகளை பெறும். 

அந்த நிலையில், தற்போது மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தாங்கள் இனி ஆடும் நான்கு லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்து 10 புள்ளிகளை தொடாமல் இருக்க வேண்டும். 

புள்ளிப்பட்டியலில் உச்சத்துக்கு சென்ற தென்னாப்பிரிக்கா.. கீழே சரிந்த இந்திய அணி

அப்போது பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதிக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இது சாத்தியமே இல்லை.

நியூசிலாந்து அணி உச்சகட்ட ஃபார்மில் உள்ளது. அந்த அணி வலுவான இந்திய அணியிடம் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. ஆஸ்திரேலியா கடந்த மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை குவித்துள்ளது. 

அந்த அணி இன்னும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகளை சந்திக்க வேண்டும். அதில் ஒன்றில் வென்றால் கூட பாகிஸ்தான் அணிக்கு சிக்கல் தான்.

ஆக மொத்தத்தில் பாகிஸ்தான் அணி அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்டது என்பதே உண்மை. ஆனால், அதிகாரப்பூர்வமாக அரை இறுதி வாய்ப்பை இழந்த செய்தி மற்ற அணிகளின் வெற்றி - தோல்வி அடிப்படையில் வெளியாகும். 

மற்றபடி பாகிஸ்தான் அணி 2023 உலகக்கோப்பை தொடரில் இருந்து லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகி விட்டது. லீக் சுற்றில் நெதர்லாந்து, இலங்கை ஆகிய இரண்டு அணிகளை மட்டுமே பாகிஸ்தான் அணி வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp