மழையால் ஆபத்து.. இது நடந்தால் போதும்... பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு

பாகிஸ்தான் அணி அரை இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது. 

மழையால் ஆபத்து.. இது நடந்தால் போதும்... பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு

நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் டி எல் எஸ் முறைப்படி வெற்றி பெற்றது.

 இதனையடுத்து, பாகிஸ்தான் அணி அரை இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது. 

இந்த வெற்றியின் ஊடாக பாகிஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. 

முதல் இரண்டு இடத்தை இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் பிடித்து தகுதி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா 10 புள்ளிகளுடன் இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளை எளிதில் வெற்றி பெறுவார்கள் என்பதால் அவர்களும் அரையிறுதிக்கு சென்று விடுவார்கள். தற்போது  நான்காவது இடத்திற்கு தான் போட்டியே நிலவுகிறது.  8 புள்ளிகள் உடன் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் போட்டி போடுகின்றன.

 இதில் ஆப்கானிஸ்தான் அணி, ஒரு போட்டியில் தோற்றால் கூட அது பாகிஸ்தானுக்கு சாதகமாக மாறிவிடும். 

நியூசிலாந்து அணி கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் அது பாகிஸ்தானுக்கு சாதகமாக மாறிவிடும்.

இந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால், பாகிஸ்தான்  கடைசி போட்டியில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும். 

ஆனால் நியூசிலாந்து -  இலங்கை மோதும் ஆட்டத்தில் மழை குறுக்கிடும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் போட்டி ரத்தானால், இரு அணிகளுக்கும் ஒரு புள்ளிகள் வழங்கப்படும். 

அப்படி நடந்தால், பாகிஸ்தான் தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தினாலே அரை இறுதிக்கு சென்று விடும்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp