தோனி பிளானை காப்பி அடித்த பாகிஸ்தான்.. சொல்லிக் கொடுத்த தமிழக வீரர்... என்ன நடந்தது?

2023 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான நிலையில் உள்ளது. தான் ஆடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் தோல்வி அடைந்துள்ளது. 

தோனி பிளானை காப்பி அடித்த பாகிஸ்தான்.. சொல்லிக் கொடுத்த தமிழக வீரர்... என்ன நடந்தது?

2023 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான நிலையில் உள்ளது. தான் ஆடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் தோல்வி அடைந்துள்ளது. 

அடுத்து வரும் போட்டிகள் அனைத்திலும் வென்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரை இறுதிக்கு முன்னேற முடியும். இந்த நிலையில், அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை சந்திக்க உள்ளது பாகிஸ்தான் அணி. 

அதுவும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை ஆடுகளத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. முன்னதாக அதே ஆடுகளத்தில் நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருந்தது.

இந்த நிலையில், சென்னை ஆடுகளத்தில் எப்படி வெல்வது என்ற குழப்பத்தில் இருந்த பாகிஸ்தான் அணிக்கு தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் லக்ஷ்மிபதி பாலாஜி கொடுத்த பேட்டி ஒன்று பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.

முந்தைய தினம் லக்ஷ்மிபதி பாலாஜி தோனி எப்படி சென்னை ஆடுகளத்தை பயன்படுத்தி வெல்வார் என அந்தப் பேட்டியில் கூறினார். பாலாஜி, தோனி கேப்டனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா அணியின் துவக்க வீரர் க்விண்டன் டி காக் இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த வீரராக திகழ்கிறார். அவரை தோனி எப்படி அவுட் ஆக்குவார் என்ற ரகசியத்தை போட்டு உடைத்தார் பாலாஜி. 

அதாவது தோனி வலது கை ஆஃப் ஸ்பின்னர்களை சென்னையில் அதிகம் பயன்படுத்துவார். இடது கை பேட்ஸ்மேன் ஆன டி காக்குக்கு தள்ளிப் போகும் வகையில் ஆஃப் ஸ்பின் வீசுமாறு பந்துவீச்சாளர்களிடம் கூறுவார் என தோனியின் திட்டத்தை கூறி இருந்தார் பாலாஜி.

மேலும், சென்னையில் ஆடும் போதெல்லாம் தோனி அதிக ஆஃப் ஸ்பின்னர்களை ஆட வைப்பார். இந்த தகவலை அறிந்த பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் போட்டியின் போது ஸ்பின்னுக்கு முக்கியத்துவம் தராமல் இருந்த நிலையில், தற்போது பாலாஜி பேட்டிக்கு பின் தீவிரமாக ஸ்பின் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறது. 

போட்டிகளில் அதிகம் பந்து வீசாத கேப்டன் பாபர் அசாம் கூட ஆஃப் ஸ்பின் வீசி பயிற்சி செய்தார். அந்த அளவுக்கு இந்த விஷயத்தை பாகிஸ்தான் அணி தீவிரமாக எடுத்துக் கொண்டு இருக்கிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp